OUR CLIENTS
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா விஜயகாந்த் Posted on 03-Jan-2018 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை, ஜன. 3-
சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒக்கி புயலால் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. 

ஆனால் தமிழக அரசு தவறான தகவலை தெரிவித்து வருகிறது. தற்போது தமிழக மீனவர்களின் வாழ்வா தாரமே கேள்விக் குறியாகி உள்ளது.  இதில் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி ஆர்.கே.நகரில் தினகரன் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று உள்ளார் என கூறினார்.   பின்னர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து நிருபர்கள் கேட்டபோது, கேப்டன் கூறியது போல்,  ஓட்டுப் போட தகுதியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். குற்ற வழக்கு இல்லாமல் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் ஜனநாயக ரீதியாக அரசியலில் பங்கேற்கலாம் என்று  கூறி புற்றப்பட்டுவிட்டார்.

Label