OUR CLIENTS
ரஜினி அரசியலில் வருவதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை : தமிழிசை சௌந்திரராஜன்
ரஜினி அரசியலில் வருவதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை : தமிழிசை சௌந்திரராஜன் Posted on 03-Jan-2018 ரஜினி அரசியலில் வருவதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை : தமிழிசை சௌந்திரராஜன்

சென்னை, ஜன. 3-
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வர இருப்பதாகவும், தனிக்கட்சி ஆரம்பித்து வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அறிவித்தார். இதனையடுத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது அவரது சொந்த முடிவு. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ரஜினியை இயக்க  வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. 

இப்படித்தான் அதிமுக ஆட்சியை பின்னால்  இருந்து நாங்கள் இயக்குகிறோம் என்றார்கள், மோடி கருணாநிதியை சந்தித்த போது திட்டமிட்டு கூட்டணிக்கான சந்திப்பு என்று அதைப்பற்றி பேசினார்கள், இப்போது ரஜினியை இயக்குகிறோம் என்று விமர்சிக்கிறார்கள்.

ஆன்மீகம், மதவாதம் இரண்டும் வேறு  வேறு.  ஆனால்,  நாங்கள் எதோ திட்டமிட்டு  மதவாதத்தை வளர்ப்பது போல சிலர் பேசி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. எது நடந்தாலும் பாஜக மீது பழி போட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

Label