OUR CLIENTS
முதல்வரின் அறிவிப்பை முடக்கும் அதிகாரிகள் நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தில் குளறுபடி!
முதல்வரின் அறிவிப்பை முடக்கும் அதிகாரிகள் நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தில் குளறுபடி! Posted on 03-Jan-2018 முதல்வரின் அறிவிப்பை முடக்கும் அதிகாரிகள் நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தில் குளறுபடி!

சென்னை, ஜன.3
அரசுத்துறைகளில், நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தை முறைப்படுத்தும் வகையிலான, முதல்வரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தாமல், அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டி.டி.சி.பி.,DTCP,  சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்,Chennai Metropolitan Development Authority,  சி.எம்.டி.ஏ., CMDA ,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, .எம்.சதானந்த் ,  KM sadhanand,  நகரமைப்பு வல்லுனர்கள், நகர், ஊரமைப்புத்துறையான, டி.டி.சி.பி., - சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், கட்டுமான திட்ட அனுமதி பணிகளுக்காக, நகரமைப்பு வல்லுனர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இத்துறைகளில், நகரமைப்பு வல்லுனர் தேர்வுக்கு, தனித்தனி வழிமுறைகள் பின்பற்றப்படுவதால், முறைகேடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், நகரமைப்பு வல்லுனர்களுக்கான பொதுவான பணி நிலையை உருவாக்க வேண்டும் என, மத்திய அரசின் நகரமைப்பு துறை அறிவுறுத்தியது.

இதையடுத்து, ‘தமிழகத்தில், சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், நகரமைப்பு வல்லுனர்களை நியமிப்பதற்கான, பொதுப்பணி நிலை வரையறுக்கப்படும்‘ என, முதல்வர், பழனிசாமி, 2017 பிப்ரவரியில், சட்டசபையில், 110 விதியின் கீழ்அறிவித்தார்.இந்த அறிவிப்பு வெளியாகி, 10 மாதங்களாகியும், கிடப்பிலேயே உள்ளது.

இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்க தலைவர், கே.எம்.சதானந்த் கூறியதாவது:திட்ட அனுமதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில், தகுதியான நகரமைப்பு வல்லுனர்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டது; இதற்கான வரைவும் தயாரிக்கப்பட்டது. ஆனாலும், அதிகாரிகளில் ஒரு பிரிவினர், இதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, முதல்வரின் அறிவிப்பு கிடப்பில் போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை, செயல்படுத்தினால், மேலிட செல்வாக்கு என்ற பெயரில், தகுதி இல்லாத நபர்களை, சீப் பிளானர்களாகவும், சீனியர் பிளானர்களாகவும் நியமிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

‘வரைவு அறிக்கை தயார்’
இது குறித்து, டி.டி.சி.பி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில், இதற்கான வரைவு விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஆனால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சிலர், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, இது தொடர்பான கோப்புகள், துணை முதல்வருக்கும், முதல்வருக்கும் செல்வதை தடுத்து வருகின்றனர். சி.எம்.டி.ஏ.,வின் பணி விதிகளுக்கு ஒப்புதல் பெறுவது, தற்காலிக பணியிடங்களுக்கு நீட்டிப்பு பெறுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து, வீட்டுவசதி துறை முதன்மை செயலரின் கவனத்துக்கு எடுத்து செல்ல, முயன்று வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Label