OUR CLIENTS
ஜிஎஸ்டியின் கீழ் அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி விதிக்க முடியாது: அருண் ஜெட்லி அறிவிப்பு
ஜிஎஸ்டியின் கீழ் அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி விதிக்க முடியாது: அருண் ஜெட்லி அறிவிப்பு Posted on 04-Jan-2018 ஜிஎஸ்டியின் கீழ் அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி விதிக்க முடியாது: அருண் ஜெட்லி அறிவிப்பு

புதுடெல்லி, ஜன. 4-
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டியின் கீழ் அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி விதிக்க முடியாது என கூறினார்.

மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் அருண் ஜெட்லி பேசியதன் விவரம் பல நாடுகளில் ஒரே வரி விகிதம் நடைமுறையில் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நாடுகளில் ஒட்டுமொத்த மக்களும் வறுமை கோட்டிற்கு மேல் இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. அதனால் இங்கு உணவு பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது. அதேசமயம் ஆடம்பர பொருட்களுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்படும். முன்பு 28 சதவீதம் வரி வசூலிக்கப்பட்ட பல பொருட்கள் 18 சதவீதம் வரியின் கீழ் கொண்டு வரப்பட்டன. இது போன்ற திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

வரி செலுத்துவதற்கான வழிமுறைகளில் உள்ள சிக்கல்களை நீக்கி எளிமையான நடைமுறையை அமல்படுத்த ஜிஎஸ்டி நெட்வொர்க் தலைவர் ஏ.பி. பாண்டி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்தும் நடைமுறையில் செய்ய வேண்டிய தேவையான மாற்றங்கள் குறித்து இந்த குழு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.

அதன்பின் திமுகவின் மாநிலங்களவை உறுப் பினரான கனிமொழி பிட் காயின்களை மத்திய அரசு அங்கீகரிக்குமா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அருண் ஜெட்லி, பிட்காயின்கள் சட்டவிரோதமானது என அறிவித்தார்.

பிட்காயின்கள் தொடர் பான விவகாரங்களை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின் பிட்காயின்கள் தொடர்பாக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Label