OUR CLIENTS
சுங்க கட்டணம் வாபசுக்கு வாய்ப்பு இல்லை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
சுங்க கட்டணம் வாபசுக்கு வாய்ப்பு இல்லை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி Posted on 04-Jan-2018 சுங்க கட்டணம் வாபசுக்கு வாய்ப்பு இல்லை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

புதுடெல்லி, ஜன. 4-
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை கைவி டுவதற்கான வாய்ப்பு இல்லை என மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

புனேயில் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்  நிதின் கட்கரி அளித்த பேட்டியில்  கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்பது நீண்டகாலத்திற்கு நீடிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் சாலைகளை சரியான முறையில் பராமரிக்கவும், வாகன ஓட்டிகள் தரமான சாலைகளை பயன் படுத்தவும், சுங்கக் கட்டணம் என்பது அவசியமான ஒன்றாகும்.

உலகம் முழுவதுமே, தரமான சாலைகள், விரைவான பயணம், எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நல்ல சேவை வேண்டுமென்றால், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு காலத்தில் மும்பையில் இருந்து புனே செல்வதற்கு, கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே, 9 மணி நேரம் வரை ஆனது. ஆனால் இப்போது  தடையின்றி 2 மணி நேரத்தில் பயணம் செய்யும் சூழல் உள்ளது.

சுங்க கட்டணத்தை கைவிட வேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையில்  சுங்கக் கட்டணத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு  இல்லை. அடுத்த 5 ஆண்டுகளில் 83,677 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் திட்டம், 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படும். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் , மெகா சாலை கட்டுமான திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் உலகளாவிய  முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு சிறப்பு செல் அமைத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Label