OUR CLIENTS
டாக்டர்களின் நன்மைக்காகவே மருத்துவ கவுன்சில் கலைப்பு மத்திய அரசு விளக்கம்
டாக்டர்களின் நன்மைக்காகவே மருத்துவ கவுன்சில் கலைப்பு மத்திய அரசு விளக்கம் Posted on 04-Jan-2018 டாக்டர்களின் நன்மைக்காகவே மருத்துவ கவுன்சில் கலைப்பு மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி, ஜன. 4-
டாக்டர்களுக்கு நன்மை கிடைக்கவே இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு மாற்றாக  தேசிய மருத்துவ ஆணையம்  அமைப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆயுர்வேதம், ஓமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், நவீன மருத்துவ முறையான, அலோபதி டாக்டர்களாக வகை செய்யப்பட்டுள்ளது.  இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் காலை, 6 மணி முதல் மாலை, 6 மணி வரை, புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக் காமல், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி நேற்று டாக்டர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இது பற்றி ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் உறுப்பினர்கள் பிரச்னை கிளப்பினர். டாக்டர் களின் வேலைநிறுத்தம் காரணமாக நோயாளிகள் உயிரிழக்கிறார்கள் என்று நரேஷ் அகர்வால் கூறினார்.  வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ஆசாத் வலியுறுத்தினார்.  இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா பதில்அளித்தார்.   டாக்டர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுகிறது.  இது தொடர்பாக இந்திய டாக்டர்கள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. அவர்களுக்கு இந்த மசோதாவில் உள்ள சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்  அவர்களிடம் அரசின் கருத்து விளக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், இந்த மசோதா பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் பார்லி.விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் லோக்சபாவில் அறிவித்தார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் இந்த மசோதா குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி குழுவை கேட்டுக் கொள்ளும் படி சபாநாயகருக்கு அனந்தகுமார் கோரிக்கை வைத்த £ர். அதன்படி பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நிலைக்குழுவை சபாநாயகரும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் இந்த முடிவை தொடர்ந்து, நாடு முழுவதும் டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Label