OUR CLIENTS
மத மாற்று திருமணத்துக்கு ஊக்கத்தொகை கிடையாது
மத மாற்று திருமணத்துக்கு ஊக்கத்தொகை கிடையாது Posted on 04-Jan-2018 மத மாற்று திருமணத்துக்கு ஊக்கத்தொகை கிடையாது

புதுடெல்லி, ஜன. 4-
சாதி மறுப்பு திருமணத்துக்கு ஊக்கத்தொகை வழங்குவது போல மதம் மாறி திருமணம் செய்தால் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று லோக்சபாவில் நேற்று முன்தினம் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் விஜய் சம்ப்ளா தெரிவித்தார்.

பார்லி.யில் உறுப்பி னர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜய் சம்ப்ளா அளித்த பதில் வருமாறு: கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் சாதி மாற்று திருமணத்தில் யாராவது ஒருவர் (கணவன் அல்லது மனைவி) தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் ரூ.2. 5 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் சரி பாதியாக இந்தத்தொகையை வழங்குகின்றன.  இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கலப்பு திருமணம்  பதிவு செய்யப்படவேண்டும் இந்த தொகையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இதே போல மதம் மாறி திருமணம் செய்கிறவர்களுக்கும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டமும் அரசிடம் தற்போதைக்கு கிடையாது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

வரதட்சணை வாங்க £மல் திருமணம் செய்பவர்களுக்கும் இதே போல ஊக்கத்தொகை அளிக்கப்படுமா என்று ஒரு உறுப்பினர்  கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர்சுமித்ரா மகாஜன், அப்படி ஒரு திட்டத்தை அமல் படுத்தினால் அது அரசிடம் இருந்து வரதட்சணை பெற்றதாகி விடுமே என்றார். அப்போது சபையில் சிரிப்பலை எழுந்தது.

Label