OUR CLIENTS
பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பால் விற்பனை
பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பால் விற்பனை Posted on 04-Jan-2018 பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பால் விற்பனை

புதுடெல்லி, ஜன. 4-
ரேஷன் கடைகள் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் மூலம் பால் விநியோகம் செய்ய பரிசிலிக்க வேண்டும் என்று தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உணவு திட்டம் உள்ளிட்டவற்றில் பாலை சேர்த்து பால் நுகர்வை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  மேலும், ரேஷன் கடை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பால் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் கூறியுள்ளது. உலக பால் வணிகத்தில் 2020க்குள் தங்களது பங்களிப்பை இரண்டு விழுக்காடாக அதிகரிக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2022க்குள் 25 கோடி டன் பால் கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Label