ஜெ.உடல் 20 நிமிடங்கள் எம்பாமிங் செய்யப்பட்டது: மருத்துவர் சுதா சேஷய்யன் Posted on 04-Jan-2018
சென்னை, ஜன. 4
ஜெயலலிதா மரணமடைந்த நாளன்று இரவுதான் அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டதாக மருத்துவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
நேற்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகி விளக்கமளித்தார். விசாரணைக்கு பிறகு, மருத்துவர் சுதா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “ஜெயலலிதா மரணமடைந்த நாளான டிசம்பர் 5ம் தேதி அன்று இரவு 12 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. சரியாக 20 நிமிடங்களில் எம்பாமிங் பணி நிறைவடைந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஒருநாளும் நான் அவரை சந்திக்கவில்லை. முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் நான் இதையேதான் கூறினேன்” என்றார்.