OUR CLIENTS
பாகிஸ்தான் ஒரு நரக பூமி: மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தாக்கு
பாகிஸ்தான் ஒரு நரக பூமி: மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தாக்கு Posted on 17-Aug-2016 பாகிஸ்தான் ஒரு நரக பூமி: மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தாக்கு

சண்டிகார்:
அரியானா மாநிலம் ரெவாரி என்ற இடத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா யாத்திரை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதை மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:


நமது பக்கத்து நாடான பாகிஸ்தான் ஒரு நரக பூமியாக இருக்கிறது. அவர்கள் அங்கிருந்து தொடர்ந்து தீவிரவாதிகளை அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த நரக நாட்டில் இருந்து அனுப்பப்படும் தீவிரவாதிகளை நமது ராணுவத்தினர் நரகத்துக்கே திருப்பி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

நேற்று முன்தினம்  கூட 5 தீவிரவாதிகளை நமது படையினர் நரகத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டு இருக்கிறது. அதன் பலனை தற்போது பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் என்ன செய்தாலும் நமது ராணுவத்தினர் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். பாகிஸ்தான் பிடியில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசு பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Label