OUR CLIENTS
மக்களையும், அரசையும் ஏமாற்றும் திரையரங்குகள்: திண்பண்டங்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்து வரிஏய்ப்பு...
மக்களையும், அரசையும் ஏமாற்றும் திரையரங்குகள்: திண்பண்டங்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்து வரிஏய்ப்பு... Posted on 04-Jan-2018 மக்களையும், அரசையும் ஏமாற்றும் திரையரங்குகள்: திண்பண்டங்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்து வரிஏய்ப்பு...

வேலூர், ஜன.4-
திரையரங்கங்களில் டிக்கெட்டில் விலை குறிப்பிடாமல், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி திரையரங்குகளில் விற்பனை செய்யும் திண்பண்டங்கள் விஸிறி விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று கூடுதல் விலைவைத்து விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றுகிறது, அதே சமயத்தில் அரசுக்கும் வரிஏய்ப்பு செய்கிறது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

 வேலூர் மாநகரில் அலங்கார் திரையரங்கம் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் செல்லும் நுகர்வோரிடம் சோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில்கள் கூட டிக்கெட் கிழிக்கும் இடத்திலேயே பறிக்கப்படுகிறது. இதனால் திரையரங்கின் உள்ளே செல்லும் நுகர்வோர் தாகத்துக்கு தண்ணீர் பாட்டில்கள் வாங்கினால் அந்த பாட்டிலில் அச்சடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விலையை விட (MRP)) கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நுகர்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் திரையரங்கின் உள்ளே விற்பனை செய்யப்படும் திண்பண்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உள்ளது. இதனால் திரைப்படம் பார்க்கச் செல்லும் நுகர்வோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதை தட்டிக் கேட்கும் நுகர்வோர் மிரட்டப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. 

அதுமட்டுமன்றி டிக்கெட் விலையும் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்த விலையை கூட டிக்கெட்டுகளில் அச்சடிப்பது இல்லை. முக்கோண வடிவிலான சீல் கூட டிக்கெட்டில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜிஎஸ்டி வரி மற்றும் கேளிக்கை வரி செலுத்துவதில் இருந்து அரசை ஏமாற்றுவதாகவும் புகார்கள் நுகர்வோர் தரப்பில் அடுக்கடுக்காக கூறப்படுகிறது. இதனால் வருமானமும் மறைக்கப்பட்டு கருப்பு பணத்திற்கு வழிவகுக்குகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் ஜிஎஸ்டி, கேளிக்கை வரி, வருமான வரி என ஒட்டுமொத்தமாக அரசை ஏமாற்றுகின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. 

இதுபோன்று, அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல கட்டணம், திண்பண்டங்கள் கூடுதல் விலை, பார்க்கிங் கட்டணம் என பொதுமக்களின் பணத்தை சூறையாடுவதால்தான் திருட்டு விசிடி பெருகி வருகிறது. திருட்டு விசிடி பெருக்கத்திற்கு காரணம்  திரையரங்கு உரிமையாளர்களே என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை. 
அரசு நிர்ணயித்த விலை
Multiplex: 150 + 28% GST(42) + 8% ET(12) =ரூ.204/- 
Non-Plex AC: 100 + 18 + 8 =ரூ. 126/-  
Non-AC: 80 + 14.40 + 6.40 = ரூ. 100.80
இந்த திரையரங்கில் திரைப்படம் பார்க்க செல்வோரிடம் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுகிறதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை நுகர்வோர் கண்டித்துள்ளனர். குறிப்பாக அந்த திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் செல்வோரின் வாகனங்களை நிறுத்த ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்? இந்த நடைமுறை மாற்றியமைக்க வேண்டும் என்று நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் நுகர்வோர் தரப்பில் இருந்து எழுந்துள்ளன. ஒரு குடும்பம் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.ஆயிரம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது பரிசீலிக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற திரையரங்குகள் மீது தனிக்கவனம் செலுத்தி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே மாநகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.  மாவட்ட நிர்வாகம் மற்றும் விற்பனை வரி துறையினர் என்னதான் நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்பும், இடைவேளையின் போதும் திரையிடப்படும் டிரைலர்களுக்கு முன் சிலைடுகள் காண்பிக்கப்படுகிறது. விளம்பர சட்டத்திற்குட்பட்டுதான் இதுபோன்ற சிலைடுகள் காண்பிக்கவேண்டும் மற்றும் சமூகம் சார்ந்த அக்கரையுடன் செயல்படவேண்டும்.  

ஆனால்,  அலங்கார் திரையரங்கில் காண்பிக்கும் சிலைடு கேலிக்கூத்தாக இருந்தது. என்னவென்றால் திரைப்படம் தொடங்கும் முன்பும்  வெல்கம் மற்றும் தங்கள் கால்களை முன்புறம் உள்ள இருக்கைகள் மீது வைக்க வேண்டாம் என்ற இரண்டு சிலைடுகளையும் ஒரேவழியாக இணைத்து காண்பிக்கப்பட்டது.  வெல்கம் என்று கால்களை அதன் மீது வைப்பதாக பொருள்படும் வகையில் அந்த சிலைடு உணர்த்துகிறது. இச்செயல் பொறுப்பற்றதன்மையை வெளிக்காட்டுகிறது.  இதனால் இந்த இரண்டு சிலைடுகளையும் தனித்தனியே பிரித்து காண்பிக்க வேண்டும் என்று நுகர்வோர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Label