OUR CLIENTS
சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த 1,316 பேர் பலி!
சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த 1,316 பேர் பலி! Posted on 04-Jan-2018 சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த 1,316 பேர் பலி!

சென்னை, ஜன.4-
சென்னை ரயில்வே கோட்டத்தில் 2017ம் ஆண்டில் செல்போன் பேசிக்கொண்டு தண்டவாளத் தைக் கடந்த மற்றும் ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த 1,316 பேர் விபத்தில் சிக்கி பலியான தாக கணக்கிடப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படை யைச் (ஆர்பிஎப்) சேர்ந்த, சென்னை கோட்டப் பாதுகாப்பு ஆணையரான லூயிஸ் அமுதன், செய்தியாளர்களிடம் நேற்று கூறி யதாவது: 2017ம் ஆண்டில் மட்டும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் மின் சார ரயில்களில், படிக்கட்டுகளில் பயணம் செய்தது தொடர்பாக 7 ஆயிரத்து 627 பேர் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களில், கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிகமாக உள்ளனர். இப்படி ஆபத்தான வகையில் படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் சலுகை பயண அட்டை ரத்து செய்யப்படும்.

செல்போன் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளங்களை கடப்பது, ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணிப்பது போன்றவற்றால் 2017-ம் ஆண்டு ஆயிரத்து 316 பேர் பலியாகி உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், படிக்கட்டு பயணம் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், ரோந்து ரயில் இஞ்சின் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Label