OUR CLIENTS
பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பு
பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பு Posted on 05-Jan-2018 பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பு

சென்னை, ஜன. 5-
பொங்கல் திருநாளை யொட்டி தமிழக மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (4.1.2018) தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 2018-ஆம் ஆண்டு 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1,56,05,630 சேலைகள் மற்றும் 1,56,17,168 வேட்டிகள் வழங்கிடும் அடையாளமாக, 7 குடும்பங்களு க்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார்கள். 

கைத்தறி நெசவாளர் களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குவதற் காகவும்,  அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால்  இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.  இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப் படுகிறது. தமிழ்நாடு 
அரசு, 2018-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 56 லட்சத்து 5 ஆயிரத்து 630 சேலைகளும், 1 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 168 வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று 7 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஓ.எஸ். மணியன்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு)  க. சண்முகம்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் டாக்டர் சந்தர மோகன். கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி,  முதன்மைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் கொ. சத்யகோபால், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்  வி. அன்புசெல்வன்,   மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Label