OUR CLIENTS
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருடன் சி.வி.சண்முகம் சந்திப்பு: சுரங்கம், குவாரிகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருடன் சி.வி.சண்முகம் சந்திப்பு: சுரங்கம், குவாரிகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் Posted on 05-Jan-2018 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருடன் சி.வி.சண்முகம் சந்திப்பு: சுரங்கம், குவாரிகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

புதுடெல்லி, ஜன.5-
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தி த்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.  தமிழகத்தில் சுரங்கம் மற்றும் குவாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் தட்பவெப்ப நிலைமாறுதல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனிடம் தமிழக அரசு கோரியுள்ளது. இதற்காக அவரை தமிழக அரசின் சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று நேரில் சந்தித்தார்.

ஹர்ஷவர்தன் இல்ல த்தில் நேற்று காலை நடந்த சந்திப்பில் தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது. அதில் உள்ள விவரங்கள் பின்வருமாறு: தமிழகத்தைப் பொறுத்தமட்டில் வரி அல்லாத வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சுரங்கம் மற்றும் குவாரி குத்தகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு ஆகியவற்றின் தீர்ப்பின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தடையின்மை சான்று இல்லாமல் இயங்கி வந்த 2,048 சுரங்கம் மற்றும் குவாரிகள் தற்போது செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இத்தகைய குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கனிமம் சார்ந்த தொழில்கள் மட்டும் இன்றி கட்டுமானத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு கனிமப் பொருள்கள் விலையேற்றம் மற்றும் வேலையில்லா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக தீர்வுகாணும் வகையில் தமிழக அரசின் சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு டெல்லியில் மனு செய்யப்பட்டது. தீர்ப்பாயம் கடந்த வருடம் ஏப்ரல் 18-ல் அளித்த தீர்ப்பில் மாநில அரசு தடையின்மை சான்று கோரி வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் தீர்வு செய்ய தடை ஏதும் இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் தட்பவெப்ப மாறுதல் அமைச்சகம் கடந்த வருடம் மார்ச் 14-ல் ஒரு உத்தரவு வெளியிட்டது. அதில், ஏற்கெனவே சுற்றுச் சூழல் தடையில்லா சான்று இல்லாமல் இயங்கிவரும் இனங்களை வரன்முறை செய்ய 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் அந்த உத்தரவில் இத்தகைய இனங்களை மத்திய அரசினால் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஏற்கெனவே இயங்கி வந்த சுரங்கம் மற்றும் குவாரிகள் கனிமம் உள்ள இடங்களில் மத்திய, மாநில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான குவாரி மற்றும் சுரங்கங்கள் 5 ஹெக்டேர் பரப்பளவிற்கு குறைவான விஸ்தீரணம் கொண்டவை ஆகும். மேற்கண்ட இனங்களை மத்திய அரசின் மூலம் பல்வேறு நடை முறைகளை கொண்டு பரிசீலிக்கப்படும் பட்சத்தில் சிறு அளவில் தொழில் செய்து வரும் குத்தகைதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்பட நேரிடும். இதனை தீர்வு செய்யும் வகையில் பொதுமக்களின் நலன் மற்றும் குத்தகைதாரர்களின் நலன் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் தடையின்மை சான்று இல்லாமல் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட 5 ஹெக்டேர் பரப்பளவிற்கு குறைவான விஸ்தீரணம் கொண்ட இனங்களை வரன்முறை செய்யும் அதிகாரத்தினை மாநில அரசுக்குப் பகிர்ந்து அளிக்குமாறும் அல்லது இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக ஒரு குழுவினை தமிழகத்திற்கு அனுப்பி நிலைமையை ஆய்வு செய்து சுரங்கம் மற்றும் குவாரிகளை மீண்டும் இயங்கி செயல்பட தீர்வுகாண ஆவன செய்யுமாறு தமிழக அரசு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label