OUR CLIENTS
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அதிமுக அரசு செயலிழந்து விட்டது : ஸ்டாலின்
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அதிமுக அரசு செயலிழந்து விட்டது : ஸ்டாலின் Posted on 05-Jan-2018 எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அதிமுக அரசு செயலிழந்து விட்டது : ஸ்டாலின்

சென்னை, ஜன. 5-
மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி, தமிழகத்தில் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காதது ஏன் என, தி.மு.க. செயல்தலைவர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியு ள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2,000 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் படுமென 2015- &2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப் பட்ட அறிவிப்பு கிடப்பில் போடப் பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப் படுமென 2017-18 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிட ப்பட்ட அறிவிப்பு செயல்வடிவம் பெற்றுவிட்டதாக ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கொண்டு வர முடியாமல் அ.தி.மு.க. அரசு செயலிழந்து நிற்பதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.

Label