OUR CLIENTS
பிரேமலதா விஜயகாந்த் கைது
பிரேமலதா விஜயகாந்த் கைது Posted on 05-Jan-2018 பிரேமலதா விஜயகாந்த் கைது

கடலூர், ஜன. 5-
கடலூர் அருகே சர்க்கரை ஆலையை முற்றுகையிட முயன்ற பிரேமலதா விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர்.  கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பத்தில் உள்ள ஈ. ஐ. டி. பாரி சர்க்கரை ஆலையில், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி, தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, ரஜினி காந்த்தின் அரசியல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த அவர், ஊடகங்களை பார்த்தால் பயமாக இருக்கிறது, கொள்கைகளைக் கேட்டால் மயக்கம் வருகிறது என்பவர் மக்களுக்காக உழைக்க முடியாது என்று கூறினார்.

பின்னர், சர்க்கரை ஆலையை முற்றுகையி டுவதற்காக சென்ற அவரை போலீசார் தடுத்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர்கள், அனுமதியை மீறியதாகக் கூறி பிரேமலதா விஜயகாந்த்தை கைது செய்தனர்.  இதைக் கண்டித்து, அவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் ஏறிச் சென்ற போலீஸ் வேனை தேமுதிக தொண்டர்கள் வழிமறித்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

Label