OUR CLIENTS
தமிழக சுகாதாரத்துறை பின்தங்கியுள்ளது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
தமிழக சுகாதாரத்துறை பின்தங்கியுள்ளது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு Posted on 05-Jan-2018 தமிழக சுகாதாரத்துறை பின்தங்கியுள்ளது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 5-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பொது வினியோக திட்டம் செயல்பட்டு வந்த போதிலும் தமிழக மக்கள் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இல்லை என்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. 2015-2016 ஆண்டை அடிப்படையாக கொண்டு தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில், 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளில் 51 சதவீத குழந்தைகள் ரத்த சோகையோடு உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் கிராமப்புற கர்ப்பிணிகளில் 52 சதவீத பேரும், 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 19 சதவீதம் பேரும், ஆண்களில் 16 சதவீதம் பேரும் ரத்த சோகையோடு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பொது வினியோக திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்போர் அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப் பட்டாலும், தமிழகத்தின் அவலநிலை தொடர்வது ஏன்?.  

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 67 சதவீதம் பேரும், தமிழகத்தில் 77 சதவீதம் பேரும் திறந்த வெளியை கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். இதனால் தொற்றுநோய் சுலபமாக பரவுவதற்கு வாய்ப்பு உருவாகிறது.  இந்தப் பின்னணியில் என்ன உணவு உண்டாலும் ஏழை, எளிய மக்களின் நலவாழ்வு மேம்படுவதற்கு வாய்ப்பே இல்லை. 

இத்தகைய காரணங் களால் தமிழக சுகாதாரத்துறை எந்தளவுக்கு பின் தங்கிய நிலையில் உள்ளது என்பதை முதல்-அமைச்சரும், சுகாதாரத் துறை அமைச்சரும் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது உறுதியான, ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, சுகாதாரத் துறையை முதன்மை நிலைய பெற உரிய நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Label