OUR CLIENTS
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை காவல் துறையின் புதிய வியூகம்தான் காரணம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்!
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை காவல் துறையின் புதிய வியூகம்தான் காரணம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்! Posted on 05-Jan-2018 பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை காவல் துறையின் புதிய வியூகம்தான் காரணம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்!

சென்னை, ஜன.5-
மக்கள் ஒத்துழைப்பும் காவல்துறையின் புதிய வியூகமும்தான் பெண்கள் பாதுகாப்பில் சென்னைக்கு முதல் இடம் கிடைக்கக் காரணம் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. போற்றுதலுக்குரிய பிறப்பாக கருதவேண்டிய பெண்கள் கேலி, கிண்டல், பாலியல் வன்கொடுமை என பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

வெளியில் மட்டும் அல்ல குடும்பத்துக்குள்ளேயும் பல்வேறு எதிர் வினைகளை எதிர்கொள்கின்றனர். அதுவும் பணிக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அலுவலகத்துக்குள்ளேயும் வெளியேயும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரம் ஒன்றை கடந்த 27ம் தேதி வெளியிட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா, சென்னை உட்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விபரங்கள் இருந்தன. இதில், பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ள நகரமாக சென்னை முதல் இடத்தை பிடித்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. 78 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்து 808 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதாவது ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை யை பொருத்தவரை லட்சத்தில் 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதல் இடத்தை பிடித்திருப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பும், காவல்துறையின் புதிய வியூகமும்தான் காரணம் என்கிறார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். சென்னைக்கு இந்த இடம் கிடைக்க பல் வேறு நடவடிக்கைகள், சவால் கள் இருந்ததாகக் கூறியுள்ளார்.

Label