OUR CLIENTS
'இன்னொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என கனவு காணாதீர்': அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை!
'இன்னொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என கனவு காணாதீர்': அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை! Posted on 05-Jan-2018 'இன்னொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என கனவு காணாதீர்': அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை!

சென்னை, ஜன.5-
 இன்னொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என நினைத்து கனவு கண்டால் அது ஏமாற்றத்தில் முடியும் என அதிமுக எம்எல்ஏக்களை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கே.பழனிசாமி எச்சரித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் 111 எம்எல்ஏக்களில் 104 பேர் பங்கேற்றனர். 

அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ (மதுரை மேற்கு), கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி), ஜி. பாஸ்கரன் (சிவகங்கை), வி.சி. ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்), வி.பி. சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), ஏ. பிரபு (கள்ளக்குறிச்சி), எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்) ஆகிய 7 பேர் சொந்த காரணங்களால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கடிதம் அனுப்பியிருந்தனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “104 எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்துக்கு வந்திருப்பது நமது ஒற்றுமையை காட்டுகிறது. இந்த ஒற்றுமை தொடர்ந்தால்தான் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும். எம்எல்ஏக்கள் என்ன விரும்புகிறார்களோ அது நிறைவேறும்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் தினகரன் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். எம்எல்ஏக்கள் அரசியல் பேசாமல் தொகுதி பிரச்னைகளை மட்டுமே பேச வேண்டும். தினகரன் கையில் ஆட்சி செல்வதை மத்திய பாஜக அரசு விரும்பவில்லை. அப்படி ஏதாவது முயற்சிகள் நடந்தால் ஆட்சி கலைந்து தேர்தல்தான் வரும். புதிய ஆட்சி அமைய வாய்ப்பில்லை. அனைவரும் பதவி இழக்க நேரிடும். மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைக்குமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இன்னொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என யாரும் கனவு காண வேண்டாம். அது ஒருபோதும் நடக்காது” என எச்சரிக்கும் தொனியில் பேசியதாக கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ ஒருவர் கூறினார்.

கூட்டத்தில் பேசிய ஒபிஎஸ், “நாம் ஒற்றுமையுடன் களப்பணி ஆற்றியிருந்தால் ஆர்.கே.நகரில் வெற்றி கிடைத்திருக்கும். அதிமுகவின் அடிப்படை வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். இது ஒரு தற்காலிக பின்னடைவுதான். வரும் காலங்களில் ஒற்றுமையுடன் வேலை செய்வோம். இல்லையெனில் அனைவருக்குமே பாதிப்புதான்” என கூறியதாக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில், பேரவைக்குள் வரும் தினகரனை சமாளிப்பது எப்படி என்பது குறித்து அதிக நேரம் விவாதம் நடந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்த பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும், “உங்களைப் போல தினகரனும் ஒரு எம்எல்ஏதான். அவர் வரும்போது யாரும் எழுந்து நின்று விடாதீர்கள். அவர் என்ன கேட்டாலும் நாங்களும், அமைச்சர்களும் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

Label