OUR CLIENTS
ஆப்கானிஸ்தான் எல்லையோர முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை குண்டுமழை: 14 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் எல்லையோர முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை குண்டுமழை: 14 தீவிரவாதிகள் பலி Posted on 17-Aug-2016 ஆப்கானிஸ்தான் எல்லையோர முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை குண்டுமழை: 14 தீவிரவாதிகள் பலி

இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரம் உள்ள கைபர் கனவாய் பகுதியில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையில் உள்ள கைபர் கனவாய் பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் மலையோர பள்ளத்தாக்கு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தீவிரவாதிகள் அங்கே முகாம்களை அமைத்தபடி, பலருக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருகின்றனர்.

கைபர் பகுதியில் இதுபோல் பழங்குடியின மக்கள் வாழும் 7 மாவட்டங்களிலும் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், இங்குள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து ராஜ்கல் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டன.

இந்த தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், தொடர்ந்து இப்பகுதியில் அடுத்தடுத்து வான்வழி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.

Label