OUR CLIENTS
ஐபிசி சட்ட விதி 377 குறித்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு விசாரணை!
ஐபிசி சட்ட விதி 377 குறித்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு விசாரணை! Posted on 09-Jan-2018 ஐபிசி சட்ட விதி 377 குறித்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு விசாரணை!

புதுடெல்லி, ஜன.9-
ஒப்புதலுடன் ஓரி னசேர்க்கையில் ஈடுபடு வோருக்கு தண்டனை வழங்கும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 377வது பிரிவு அரசியலமைப்புக்கு மாறானது என அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ எம் கான்வில்கர், டி ஒய் சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் நவ்தேஜ் சிங் ஜோஹர் என்பவர் ஓரின சேர்க்கை தொடர்பாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

இந்திய குற்றவியல் சட்டம் 377வது பிரிவு இயற்கைக்கு மாறானது என்றும் இயற்கைக்கு முரணாக ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ அல்லது விலங்குகளுடனோ சேர்க்கையில் ஈடுபடுவோர்  ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் அல்லது 10 ஆண்டு சிறை தண்டனைக்குள்ளாவார்கள் என கூறப்பட்டிருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

ஆனால் ஒப்புதலுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடு வோருக்கு தண்டனை வழங்குவது நியாயமற்றது. எனவே, இந்திய குற்றவியல் சட்டத்தின் 377வது பிரிவு அரசியலமைப்புக்கு மாறானது என அறிவிக்க கோரி நவ்தேஜ் சிங் ஜோஹர் என்பவர் மனு தாக்கல் செய்திருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தாதர், நவ்தேஜ் சிங் ஜோஹர் தரப்பில் ஆஜரானார். இன்பத் திற்கான கூட்டாளியை தேர்ந்தெடுப்பது ஒவ் வொருவரின் அடிப்படை உரிமை என்று அண்மையில் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம் கடந்த 2009ம் ஆண்டு என்ஜிஓ அமைப்பு தொடர்ந்த வழக்கில் 377வது பிரிவை அரசியலமைப்புக்கு விரோதமானது என டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என  வழக்கறிஞர் அர்விந்த் தாதர் சுட்டிக் காட்டினார்.

ஆனால் 2014ம் ஆண்டு டில்லி உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ரத்துச்செய்து இந்திய குற்றவியல் சட்டத்தின் 377வது பிரிவு அரசியல மைப்புக்கு உட்பட்டதே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதனால்தான் இப்பொழுது மீண்டும் பொது நல மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தாதர் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

Label