OUR CLIENTS
மத்திய பிரதேசத்தில் நானாஜி தேஷ்முக் சிலை திறப்பு : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!
மத்திய பிரதேசத்தில் நானாஜி தேஷ்முக் சிலை திறப்பு : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு! Posted on 09-Jan-2018 மத்திய பிரதேசத்தில் நானாஜி தேஷ்முக் சிலை திறப்பு : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!

சித்தரகூத்,ஜன.9-
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மத்திய பிரதேசத்தில் ஆயுர்வேத மருத்துவ நிலையமான ‘ஆரோக்கியதம்’ வளாகத்தில் புகழ்பெற்ற சமூக சேவகரான நானாஜி தேஷ்முக் அவர்களின் சிலையை திறந்து வைத்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உடன் வந்துள்ளார். நேற்று காலை ஹெலிகாப்டரில் மத்தியபிரதேசம் வந்தடைந்த அவர்களை முதலைமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் மற்றும் ஆளுநர் ஓ.பி கோஹ்லி வரவேற்றனர்.

பின் சாத்னா மாவட்டத்தில் தீனதயாள் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் ‘ஆரோக்கியதாம்’ என்ற ஆயுர்வேத மருத்துவ நிலைய வளாகத்திற்கு சென்ற ராம்நாத் கோவிந்த் அங்கு புகழ்பெற்ற சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் அவர்களின் சிலையை திறந்து வைத்தார்.

அதன்பின் தீனதயால் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் பிற திட்டங்களை ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.

Label