OUR CLIENTS
காஷ்மீர் மக்கள் நலனுக்காக இந்தியா-பாக். நண்பர்களாக மெகபூபா வேண்டுகோள்
காஷ்மீர் மக்கள் நலனுக்காக இந்தியா-பாக். நண்பர்களாக மெகபூபா வேண்டுகோள் Posted on 09-Jan-2018 காஷ்மீர் மக்கள் நலனுக்காக இந்தியா-பாக். நண்பர்களாக மெகபூபா வேண்டுகோள்

ஸ்ரீநகர், ஜன. 9-
‘காஷ்மீர் மக்கள், எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் நலன்களை கருதி இந்தியாவும், பாகிஸ்தானும் பகையை மறந்து நண்பர்களாக வேண்டும் என பிரதமர் மோடியையும், பாகிஸ்தானையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்த மாநில முதல்வர் மெகபூபா நேற்று முன்தினம் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உதவி செய்யுமாறு எல்லைக்கு அப்பால் இருக்கும் பாகிஸ்தானியர்களையும், என்னுடைய நாட்டின் பிரதமர் மோடியையும் நான் கேட்டுக் கொள்கிறேன். காஷ்மீர் மக்கள் மற்றும் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களின் நலன் கருதி இரு நாடுகளும் தங்கள் பகையை மறந்து நண்பர்களாக வேண்டும். இதற்கான நடவடிக்கையில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் அரசும் இறங்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு மெகபூபா பேசினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபோர் நகரில் நேற்று முன்தினம் மிகவும் சக்திவாய்ந்த குண்டு வெடித்து 4 போலீஸ்காரர்கள் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் நடந்த மாறுநாள் இப்படி ஒரு வேண்டுகோளை மெகபூபா விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Label