OUR CLIENTS
பாகிஸ்தான் தேசிய கீதம் பாடிய 4 கிரிக்கெட் வீரர்கள் கைது
பாகிஸ்தான் தேசிய கீதம் பாடிய 4 கிரிக்கெட் வீரர்கள் கைது Posted on 09-Jan-2018 பாகிஸ்தான் தேசிய கீதம் பாடிய 4 கிரிக்கெட் வீரர்கள் கைது

ஸ்ரீநகர், ஜன. 9-
காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் ஆரியன் எனும் ஊரில் சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இரண்டு ஊர்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு 2 ஊர்களின் கிரிக்கெட் வீரர்களும் மைதானத்தில் அணிவகுத்து நின்றனர். அவர்கள் பச்சை மற்றும் வெள்ளை நிற சீருடை அணிந்து இருந்தனர். அப்போது பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அது முடிந்ததும் இளம் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் கொடிக்கு வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினார்கள். காஷ்மீர் இளைஞர்கள் பாகிஸ்தான் தேசிய கீதத்துக்கு அணிவகுத்து நின்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதை கண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் காஷ்மீர் போலீசார், 4 கிரிக்கெட் வீரர்களை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இதற்கிடையே அந்த 4 இளைஞர்களின் பெற்றோர்கள் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். தங்கள் மகன்களை கண்காணிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அந்த 4 இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

Label