OUR CLIENTS
தமிழ்நாட்டில் 584 ஏ.டி.எம். மோசடி வழக்குகள் பதிவு: அமைச்சர் அல்போன்ஸ் தகவல்
தமிழ்நாட்டில் 584 ஏ.டி.எம். மோசடி வழக்குகள் பதிவு: அமைச்சர் அல்போன்ஸ் தகவல் Posted on 09-Jan-2018 தமிழ்நாட்டில் 584 ஏ.டி.எம். மோசடி வழக்குகள் பதிவு: அமைச்சர் அல்போன்ஸ் தகவல்

புதுடெல்லி, ஜன. 9-
பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ராஜாங்க அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானன் எழுத்துமூலம் பதில் அளித்தார். அதில் அவர், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, டெபிட் கார்டு, இணையதள வங்கியியல் ஆகியவற்றின் வழியாக மோசடி செய்ததாக நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 433 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த வழக்குகளில் 1,003 வழக்குகளுடன் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது எனவும், 619 வழக்குகளுடன் அரியானா 2-வது இடத்தில் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இத்தகைய 584 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு 3-வது இடம் கிடைத்து இருக்கிறது. இமாசல பிரதேசத்திலும், சிக்கிமிலும்தான் மிகக்குறைந்த எண்ணிக்கையாக தலா 2 வழக்குகள் பதிவாகி உள்ளன.

Label