OUR CLIENTS
கோவை கொடிசியாவில் ராணுவ தளவாட உதிரி பாகம் தயாரிக்கும் மையம்: நிர்மலா சீதாராமன்
கோவை கொடிசியாவில் ராணுவ தளவாட உதிரி பாகம் தயாரிக்கும் மையம்: நிர்மலா சீதாராமன் Posted on 09-Jan-2018 கோவை கொடிசியாவில் ராணுவ தளவாட உதிரி பாகம் தயாரிக்கும் மையம்: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, ஜன. 9-
கோவை கொடிசியாவில் ராணுவ தளவாட உதிரி பாகம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி யாளர்களை சந்தித்த அவர், ''ராணுவ தளவாட உதிரி பாகம் தயாரிக்கும் மையமாக கோவை தேர்வாகியுள்ளது. கோவை கொடிசியாவில் ராணுவ தளவாட உதிரி பாகம் தயாரிக்க முதற்கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒக்கி புயல் நவ.,29ல் தாக்கியது.  நவ.,30ம் தேதியே மீனவர்களை தேடும் பணியை தொடங்கிவிட்டோம். டிச.,26ம் தேதி வரை தேடும் பணி நடந்தது. தற்போது இன்னும் பல மீனவர்கள் மீட்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்களுடன் ஆலோசித்து, தேடும் பணியை நீடிக்க முயற்சிப்போம்'' என்று தெரிவித்தார்.

Label