OUR CLIENTS
மாணவ--மாணவிகளின் பாதுகாப்புக்கு வழிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு: அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவு
மாணவ--மாணவிகளின் பாதுகாப்புக்கு வழிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு: அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவு Posted on 09-Jan-2018 மாணவ--மாணவிகளின் பாதுகாப்புக்கு வழிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு: அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி, ஜன. 9-
நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கில், அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அருகே குர்கானில் பள்ளிக் கழிவறையில் மாணவன் ஒருவன் கழுத்தறுத்து கொல்லப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கவும், அதை பள்ளிகள் கடைப்பிடிக்கவும் உத்தரவிடக் கோரி, உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பொதுநல வழக்கு தொடர்பாக வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவி ட்டதுடன், விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Label