OUR CLIENTS
வேற்று மதத்தினருக்கு திருப்பதியில் வேலை இல்லை
வேற்று மதத்தினருக்கு திருப்பதியில் வேலை இல்லை Posted on 09-Jan-2018 வேற்று மதத்தினருக்கு திருப்பதியில் வேலை இல்லை

திருமலை, ஜன. 9-
வேற்று மதத்தை சார்ந்த 44 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து, திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். உலகிலேயே அதிக வருமானம் வரும் கோவில்களில் ஒன்றான இந்த கோவில் இந்துக்களின் கோவிலாக இருந்தாலும் இதில் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி தேவஸ்தான பெண் அதிகாரி ஒருவர், தேவஸ்தானம் கொடுத்த காரில் சர்ச்சுக்கு சென்று வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த பெண் அதிகாரி உள்பட 44 வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆந்திர அரசின் வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை கோவில் விதிமுறைகளின்படி, இந்து  மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, கோவிலில் பணியாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. 

Label