OUR CLIENTS
ஓகி புயலின் போது நடந்தது என்ன? பேரவையில் முதல்வர் விளக்கம்!
ஓகி புயலின் போது நடந்தது என்ன? பேரவையில் முதல்வர் விளக்கம்! Posted on 10-Jan-2018 ஓகி புயலின் போது நடந்தது என்ன? பேரவையில் முதல்வர் விளக்கம்!

சென்னை, ஜன.10-
ஒகி புயல் பற்றிய எச்சரிக்கை உரிய நேரத்தில வெளியிடப்பட்டும் 100 கடல் மைல்களுக்கு அப்பால் நீண்ட தூரத்தில் மீன் பிடித்தவர்களுக்கு எச்சரிக்கைச் செய்தி கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் ஓகி புயலில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டது என தமிழக முதல்வர் பதில் அளித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஓகி புயல் பற்றியும் மீனவர்கள் பற்றியும் பல கேள்விகளை எழுப்பினார். அக்கேள்விகளின் விவரம்: தமிழக சட்டசபையில் ஓகி புயலால் மாயமான மீனவர்கள் பற்றிய தகவல்கள் ஆளுநர் உரையில் இல்லை. ஒகி புயல் நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் கோரிய முதற்கட்ட நிதியை, ஆளுநர் உரையில் குறைத்தது ஏன்? ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு கோரியிருந்த கோரிக்கையின் நிலை என்ன? என தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விகளை எழுப்பினார். அக்கேள்விகளுக்கு தனது விரிவான பதிலில் முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். அதன் விவரம்: உயர் அலைவரிசை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம், ஆழ்கடலில் 40 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு 29.11.2017 அன்று பிற்பகல்2.15 மணிக்கு எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டு, 100 படகுகளில் தங்களது சொந்த ஊர்களுக்கும் சிலர் அருகாமையில் உள்ள ஊர்களுக்கும் கரை திரும்பினர். 

100 கடல் மைல்களுக்கு அதிகமான தூரத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்கு, புயல் சின்னம் உருவாவதற்கு முன்னரே ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கும் மேற்படி எச்சரிக்கை தகவல்கள், உரிய தொழில் நுட்ப கருவிகள் இன்மையால்  சென்றடையவில்லை.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை தேடி  மீட்டெடுக்க, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய விமானப் படை ஆகியவற்றை அனுப்புமாறு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களையும், மாண்புமிகு  உள்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

மேலும், 11 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆகியோர் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நான் உடனடியாக அனுப்பி வைத்தேன். பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களை அவரவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து வரும் பணியினை ஒருங்கிணைக்க 5  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் நான் அனுப்பி வைத்தேன். பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் தங்களது சொந்த ஊர் நலமாக திரும்புவதற்காக ஒவ்வொருக்கும் உணவுப் படியாக தலா ரூபாய் இரண்டாயிரமும், அதிகபட்சமாக மீன்பிடி விசைப்படகிற்கு ஆயிரம் லிட்டர் எரிஎண்ணெய் வழங்கப்பட்டது. அரசால் அனுப்பி வைக்கப்பட்ட 5 மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்றடைந்து, எடுத்த நடவடிக்கைகளால் அங்கு தஞ்சமடைந்திருந்த 217 மீன்படி படகுகள் மற்றும், 1,724 தமிழ்நாடு மீனவர்கள் பத்திரமாக சொந்த ஊர்களுக்கு படகுகளுடன் அழைத்து வரப்பட்டனர். 
மேலும், விவசாய நிலங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதாரங்களை மதிப்பிடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
காணாமல் போன மீனவர்களை துரிதமாக மீட்கும் பொருட்டு இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் இந்திய விமானப் படை அதிகாரிகளுடனும் ஆய்வுக் கூட்டம் 6.12.2017 அன்று எனது தலைமையில் நடத்தப்பட்டது.

காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக தற்போதுள்ள ஏழு வருட கால அளவை குறைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், காணாமல் போன மீனவர்களை தங்கள் படகுகள் மூலம் தேடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தாமாகவே முன்வந்ததை அடுத்து அவர்களின் தேடும் பணிகளுக்கு தேவையான எரி எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களுக்கான செலவினத்தையும் தமிழ்நாடு அரசே வழங்கியுள்ளது.

மீனவர்களுக்காக கம்பியில்லா தொலை தொடர்பு சாதனங்கள் (ஷ்வீக்ஷீமீறீமீss sமீtணீ) 62 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை சந்தித்த போது, ‘ஒகி’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால், அதனையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்  என  கோரிக்கை விடுத்தேன்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹெலிகாப்டர்கள், இறங்கு தள வசதி மற்றும் தொலைதுலீர தொடர்பு வசதி ஆகியவற்றுடன் பிரத்யேக கடற்படை நிலையம் ஒன்றினை விரைவில் நிறுவிட மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டேன்.   மேலும், ஒகி புயலினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சமர்ப்பித்தேன். மத்திய அரசின் 90 சதவிகித  மானியத்துடன், 1500 உயர் மின்அதிர்வெண் கம்பியில்லா தொலை தொடர்பு சாதனங்கள் (ழபைலீ குசநளூரநஸீஉல றசைநடநளள ளநவள) வழங்கவும், தமிழ்நாட்டிலுள்ள கடலோரங்களில் உயர்மின் அதிர்வெண் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கவும், உயர்மின் அதிர்வெண் சேனல்களை உபயோகிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை பற்றிய அறிவிப்புகளை தமிழில் தெரியப்படுத்த பிரத்யேக செயற்கை கோள் ரேடியோ அலைவரிசை (னுநனவீஉயவநன  ளுயவநடடவைந சுயனவீடி ஊலீயஸீநேட) ஒன்றினை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக கன்னியாகுமரி  மீனவர்களின் பிரச்சினைகளுக்கு  நிரந்தர தீர்வு காண தொலைதொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற அனைத்து சதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும்.  மேலும், கடல் அரிப்பினை தடுக்கும் பொருட்டு, கடல் அலைதடுப்புச் சுவர்கள்  அமைக்க வேண்டும்.   இப்பணிகளுக்கென 4,218 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், மீன் பிடிக்க சென்று  நாளது தேதி வரை கரை திரும்பாத தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் தேடி கண்டுபிடித்திட மத்திய பாதுகாப்புத் துறைக்கு மாண்புமிகு பாரத பிரதமர் உத்தரவிட வேண்டும்.  குறிப்பாக, ஆழ்கடலுக்கு சென்றுள்ள கடைசி மீனவர் கிடைக்கின்ற வரையில் தேடுதல் பணி தொடர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

“ஒகி” புயலின் பாதிப்புகளை  மத்திய குழு  ஆய்வு செய்து,  அதன் அடிப்படையில் முதற்கட்ட நிவாரணமாக 133 கோடி ரூபாய் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 9302 கோடி ரூபாய் கோரப்படும். “ஒகி” புயல் சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை விரைவாக திரும்ப மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதன் விளைவாக, அம்மாவட்டம் குறுகிய காலத்தில் இயல்பு நிலைமைக்கு திரும்பியது மட்டுமல்லாமல், 3522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.   மாண்புமிகு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திரு. பிரின்ஸ் அவர்கள் ஆவேசமாக இங்கே பேசினார். ஆகவே, அவர்களுடைய ஆட்சி மத்தியிலே எத்தனை ஆண்டு காலம் ஆட்சி இருந்தது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுது எல்லாம் நீங்கள் சொன்ன அந்த கோரிக்கை எளிதாக நிறைவேற்றப்பட்டு இருக்கலாம். அங்கே ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்தீர்கள். அது மத்திய அரசிடம் இருக்கிறது. அந்த அதிகாரத்தை அப்பொழுதே பெற்றுத் தந்திருந்தால் உடனடியாக பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டெடுத்து இருக்கலாம்.  அதை செய்ய தவறிவீட்டீர்கள். ஆனால், அம்மாவினுடைய அரசு எப்பொழுது எல்லாம் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அவர்களை மீட்கவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலே, மத்திய அரசிடத்திலே விரைவாக ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அவர்கள் நிறைவேற்றி தருவார்கள் என்று எண்ணுகிறோம் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.  இவ்வாறு, முதல்வர் பழனிசாமி, தன் பதிலில் கூறியுள்ளார்.

Label