OUR CLIENTS
தமிழகத்தில் சிறப்பான சேவையில் மகப்பேறு மருத்துவம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்!
தமிழகத்தில் சிறப்பான சேவையில் மகப்பேறு மருத்துவம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்! Posted on 10-Jan-2018 தமிழகத்தில் சிறப்பான சேவையில் மகப்பேறு மருத்துவம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்!

சென்னை, ஜன.10-
தமிழகத்தில் பிரசவ மையங்களில் பேறுகாலம் என்பது 99.82 சதவீதம் என்கிற உன்னத நிலையை எட்டியுள்ளோம். மகப்பேறு மருத்துவம் சிறப்பான நிலையை எட்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

நேற்று (09.01.2018) சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது துறைமுகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்பாபு சென்னை யானைகவுனி பகுதியில் மகப்பேறு மருத்துவமனை அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணியில் உள்ள கே.ஜி.எச் மகப்பேறு மருத்துவமனையிலும், வடசென்னை பகுதியில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகிய நான்கு மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஒரு நாளைக்கு 100 பிரசவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஐ.ஓ.ஜி மற்றும் கஸ்தூர் பாய் காந்தி மகப்பேறு மருத்துவமனைகளைப் பொருத்தவரை மொத்தம் 1075 படுக்கைகள் கொண்ட, சிறந்த மருத்துவமனை, 91 சதவீதம் பயன்பாடு உள்ளது. ஐ.ஓ.ஜி. மருத்துவ மனையைப் பொருத்தவரையில் 62 சதவிகிதம் மட்டும் இருக்கின்றது. வருங்காலத்தில் இன்னும் தேவைகள் அதிகரிப்பின், நிச்சயம் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே தமிழ் நாட்டில் 126 சீமாங்க் மையங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் 167 என்று இருக்கின்ற நிலையிலே, நம்முடைய தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 64 என்ற உயர்வான நிலையை நாம் அடைந்திருக்கின்றோம். இந்திய அளவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் மருத்துவ மையங்களில் பிரசவம் 99.82 சதவிகிதம்.

எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு என்ற நிலைமை இல்லை. அந்தக் காலத்தில் மருத்துவச்சியிடம் சென்று பிரசவம் பார்க்கின்ற நிலையையெல்லாம் மாற்றி, தற்போது மகப்பேறு சேவையிலே மிக உயர்வான நிலையை அரசு மருத்துவமனைகள் அடைந்திருக்கின்றன. கடந்த வருடம் 1,000-க்கு 19 என்ற நிலையில் இருந்த குழந்தை இறப்பு விகிதம் தற்போது 17 ஆக குறைந்துள்ளது.

இந்த ஓராண்டு மட்டும் 10 சதவிகிதம் குறைத்து தமிழ்நாடு அரசு இன்றைக்கு மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. இதை மத்திய அரசும், உலக சுகாதார நிறுவனமும் பாராட்டியிருக்கிறது. இந்திய அளவில் இந்த சதவிகிதம் இரண்டு மடங்காக இருக்கிறது. தமிழகத்தில் 17, இந்திய அளவில் 38 என்ற அளவில் இருந்து கொண்டிருக்கின்றது.

இதையெல்லாம் மனதிலே வைத்துக் கொண்டுதான் இன்றைக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், நியோ-நேடல் ஆம்புலன்ஸ் 24 மணிநேரமும் செயல்படும் சீமாங்க் மையங்கள், சிசு பராமரிப்பு மையங்கள் என பல உயர்வான சேவைகளை வழங்கி, இந்திய அளவிலே தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.

ஏற்கெனவே சென்னை யில் 19 இட ங்களில் 24 மணிநேரமும் செயல்படும் தாய்சேய் நல மையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மகப்பேறு தாய்மார்களின் தேவையைக் கருதி, நிச்சயமாக பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, கூடுத லாக மகப்பேறு மருத்துவ மனைகள் அமைக்கப்படும் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் மருத்துவ மனைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக தமிழக முதல்வரால் நேரடியாக 556 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து பொது சுகாதாரத் துறையில் காலிப்பணியிடங்கள் இல்லை என்ற நிலையை எட்டி இருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மருத்துவர் காலிப் பணியிடங்கள் இல்லை என்ற நிலையை முதன்முதலாக 2017-2018-ல் நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம். பொது வாக மருத்துவர்களைப் பொறுத் தவரையில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் பணி புரிவதற்கு ஆர்வமாக இருக்கின்றார்கள். இருந்தாலும்கூட, அவர்களிடம் கவுன்சிலிங் மூலமாக வட்டம் / வட்டம் சாரா மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்‘’ என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

Label