OUR CLIENTS
ஆளுங்கட்சியினர் ஆசியுடன் மது விற்பனை அமோகம்! குடி பிரியர்கள் விடிய விடிய கொண்டாட்டம்
ஆளுங்கட்சியினர் ஆசியுடன் மது விற்பனை அமோகம்! குடி பிரியர்கள் விடிய விடிய கொண்டாட்டம் Posted on 10-Jan-2018 ஆளுங்கட்சியினர் ஆசியுடன் மது விற்பனை அமோகம்! குடி பிரியர்கள் விடிய விடிய கொண்டாட்டம்

கடலூர், ஜன.10-
மாவட்டம் முழுவதும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன் விடிய விடிய மது விற்பனை அமோகமாக நடப்பதால், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மதுவால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதைத் தடுக்க வேண்டும் என மதுக்கடைகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமானது. தமிழகத்தில் பெண்களே முன்நின்று போராட்டங்களில் ஈடுபட்டதால், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதுபோல், அரசியல் கட்சிகள், பொதுநல ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்ததன் பேரில், நெடுஞ்சாலையோர டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான கூடங்கள், கிளப்புகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்டத்தில் பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், உள்ளூர் போலீசார் ஆதரவுடன், கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரித்தது. இது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை கவனித்த டாஸ்மாக் நிர்வாகம், ஊருக்கு ஒதுக்குப்புறமான விளை நிலங்களில் மதுக்கடைகளை திறக்க தீவிரம் காட்டியது. ஆனால், கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக, புதிதாக மதுக்கடைகள் திறக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், மூடப்பட்டிருந்த பகுதிகளில், கடந்த இரண்டு மாதங்களாக டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், குடி பிரியர்களுக்கு மதுபானங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதற்கிடையே, டாஸ்மாக் கடைகளுடன் செயல்படும் பார்களுக்கான டெண்டர் கட்டண சதவீதத்தை 2.5 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக உயர்த்தி நிர்ணயித்தது டாஸ்மாக் நிர்வாகம். இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பெரும்பாலானோர் டெண்டர் எடுக்காமல் புறக்கணித்தனர். அதிருப்தியடைந்த டாஸ்மாக் நிர்வாகம், அனுமதியின்றி நடத்தப்படும் பார்களுக்கு சீல் வைக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆனால், மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் டாஸ்மாக் மதுபானங்கள் தட்டுப்பாடின்றி விற்பனையாகிறது. பகல் 12:00 மணிக்கு மேல், இரவு 10:00 மணிக்குள் என்பது டாஸ்மாக் திறப்பு நேரம் என்றாலும், அதனருகே அனுமதியின்றி செயல்படும் பார்களில், 24 மணி நேரமும் மதுபானம் விற்பனையாகிறது. இது உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தும், கண்டும் காணாமல் இருப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Label