OUR CLIENTS
நடுத்தர மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்க திட்டம்: மத்திய பட்ஜெட்டில் மோடி அரசு தீவிரம்
நடுத்தர மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்க திட்டம்: மத்திய பட்ஜெட்டில் மோடி அரசு தீவிரம் Posted on 10-Jan-2018 நடுத்தர மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்க திட்டம்: மத்திய பட்ஜெட்டில் மோடி அரசு தீவிரம்

புதுடெல்லி, ஜன. 10-
மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்க பா.ஜ. அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருமானவரி விலக்கு வரம்பை உயர்த்துவது பற்றி ஆலோசனைகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் வகையில் இந்த பட்ஜெட் அமையப் போகிறது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 29ம் தேதி கூடுகிறது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வருவதால், இது தான் முழுமையான பட்ஜெட்டாக இருக்கும். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தான்தாக்கல் செய்ய முடியும். எனவே இந்த முழுமையான பட்ஜெட்டில்பல சலுகைகள் அறிவிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் நிதிஅமைச்சரும் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நடுத்தர மக்களுக்கு பலன்  அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில்ஒரு அம்சமாக வருமானவரி விலக்கு உச்சவரம்பு  உயர்த்தப்படலாம் என  கூறப்படுகிறது. தற்போது ரூ.இரண்டரை லட்சம் வரை வருமான வரி விலக்கு அமலில் உள்ளது. இரண்டரை லட்சத்தில் இருந்துரூ. 5லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள்  5 சதவீத வரி கட்ட வேண்டும்.  இதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்றும் 80 சி பிரிவின் கீழ் கூடுதல் வரிச்சலுகை தரப்படும்  என்றும் தெரிய வந்துள்ளது.  மேலும் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் மீது நீண்டகால ஆதாய வரி மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

மேலும் இந்த பட்ஜெட்டில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறைக்கான வரியைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் உள்நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் சுமார் 25 கோடி  நடுத்தர குடும்பங்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் ஊதியம் அதிகரித்துவருவதோடு வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை வளர்ந்துவருகிறது  குறிப்பாக செப்டம்பர் மாதத்தோடு முடிந்த 2017-&18ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சுற்றுலாத் துறை 10 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 8 சதவிகித வளர்ச்சி காணப்பட்டது. தற்போது இந்தியாவில் சுற்றுலாத் துறை சார்ந்த பணிகளில் 40லட்சம்   பேர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த பத்தாண்டுகளில் ஒரு கோடி  பேர் இத்துறை சார்ந்த பணிகளில் கூடுதலாக ஈடுபடுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  எனவே சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த துறைகளில் வரிகள் கணிசமாக குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

Label