OUR CLIENTS
உண்மை சொன்னால் வழக்கா இது சர்வாதிகார ஆட்சியா? ஆதார் கசிவில் தலைவர்கள் கண்டனம்
உண்மை சொன்னால் வழக்கா இது சர்வாதிகார ஆட்சியா? ஆதார் கசிவில் தலைவர்கள் கண்டனம் Posted on 10-Jan-2018 உண்மை சொன்னால் வழக்கா இது சர்வாதிகார ஆட்சியா? ஆதார் கசிவில் தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி, ஜன.10-
ஆதார் தகவல்கள் கசிவதாக செய்திகள் வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சர்வாதிகார ஆட்சியின் தொடக்கம் என்று தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆதார் தகவல்கள் 500 ரூபாய் கொடுத்தால் கிடைக்கிறது என்று ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் செய்தி வெளியானது. இது பற்றிய உண்மையை கண்டறிந்து, தகவல்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பேட்டி அளித்தார். பத்திரிகை சுதந்திரத்தை எங்கள் அரசு பறிக்கவில்லை. எப்ஐஆரில் யார் பெயரும் குறிப்பிட வில்லை. அடையாளம் தெரியாத நபர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உண்மையான குற்ற வாளிகளை கண்டுபிடிக்க அந்த பத்திரிகையாளர் எல்லாவி தமான உதவிகளும் செய்யும்படி கேட்டுக் கொள்வதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

அரசின் இந்த செயல்பாட்டுக்கு பா.ஜ. எம்.பி. சத்ருகன் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஆதார் தகவல்கள் கசிவதால் தவறாக பயன்படுத்தப்படுமே என்று செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையை வெளிக் கொண்டு வந்தார் என்பதற்காக வழக்கு என்றால் இது என்ன வகையான நீதி... அரசியல் பழிவாங்கும் செயலில் ஒரு அம்சமா..  நாம் என்ன பனாமா நாட்டில் வாழ்கிறோமா. நாட்டுக்காக மக்களுக்காக நேர்மையான முறையில் செயல்படும் பொது மக்களுக்கும் இந்த கதி தானா.. அரசில் உண்மையாக உள்ள அதிகாரிகள், இது விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து சரியான நடவடிக்கை எடுப்பாரக்ள் என்று நம்புகிறேன் என்று அவர் கூறிஉள்ளார்.

உண்மையை வெளிப் படுத்தினார் என்பதற்காக   ஒரு பத்திரிகையாளர் மீது வழக்கு என்றால் போலீஸ் ராஜ்யம் துவங்கி விட்டது என்றே அர்த்தம். மதிப்புமிக்க பணி செய்துள்ள அந்த பத்திரிகையாளரை ஒடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருப்பது நல்லதல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் கூறியுள்ளார்.

Label