OUR CLIENTS
காந்தியை சுட்டது கோட்சே மட்டும் தான்: மறு விசாரணை தேவையில்லை
காந்தியை சுட்டது கோட்சே மட்டும் தான்: மறு விசாரணை தேவையில்லை Posted on 10-Jan-2018 காந்தியை சுட்டது கோட்சே மட்டும் தான்: மறு விசாரணை தேவையில்லை

புதுடெல்லி, ஜன. 10-
காந்தியை சுட்டது கோட்சே மட்டும் தான்.  எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என கோர்ட்டுக்கு  உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சர்வான் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியை கோட்சே மட்டும் சுடவில்லை. மர்ம நபர் சுட்ட போது பாய்ந்த நான்காவது தோட்டா தான் காந்தியின் உயிரை பறித்தது எனவே மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில்  பங்கஜ் பத்னிஸ் என்ற ஆராய்ச்சியாளர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சர்வான் என்பவரை நியமித்தது. காந்தி கொலை பற்றி விசாரித்த விசாரணை கோர்ட்டின் 4000 பக்க ஆவணங்களை அமரேந்திரசர்வான் ஆய்வு செய்தார். 70ஆண்டுகளுக்கு முன்பு நடந்த  கொலையில் 12பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஒருவர் அப்ரூவர் ஆகிவிட்டார். கோட்சே, நாராயண் தத்தாத்ரேயா ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.  ஐந்து பேருக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் அனைத்தையும் படித்து ஆய்வு செய்த வழக்கறிஞர் சர்வான் சுப்ரீம்கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், காந்தியை கோட்சே மட்டும் தான் சுட்டுள்ளார்.  வேறு யாரும் சுட்டதற்கான எந்தவித ஆதாரமும் கிடையாது.  இதில் அன்னிய உளவு சக்திகள் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. என்று கூறிஉள்ளார். இதற்கு ஆதாரமாக  ஏராளமான ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 12ம் தேதி நடக்கிறது.

Label