OUR CLIENTS
சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல: உச்சநீதிமன்றம் அறிவிப்பு Posted on 10-Jan-2018 சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி, ஜன. 10-
சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல. தியேட்டர் உரிமை யாளர்கள் விருப்ப ப்பட்டால் தங்கள் திரையரங்குகளில் படம் துவங்கும் முன்பு தேசிய கீதம் இசைக்கலாம் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் திரையரங்குகளில் படம் துவங்கும் முன் கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ‘‘மத்திய அரசு அமைக்கும் மத்திய அமைச்சகங்களின் 12 உறுப்பினர் கொண்ட பிரதிநிதிகள் குழு இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும். 

மத்திய அரசின் குழு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாய மல்ல.’’ என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்தார்.உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஏ.எம். கான்வில்கர் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் கூறுகையில் ‘‘திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பது தொடர்பாக அனைத்து தரப்பு கருத்துகள் மற்றும் விவரங்களை அலசி ஆராய்ந்த பின்புதான் மத்திய அரசின் பிரதிநிதிகள் குழு இறுதி முடிவை எடுக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினர்.

மேலும் விரும்பியவர்கள் தங்கள் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கலாம். தேசிய கீதத்துக்கு கால் ஊனமுற்றவர்கள் எழுந்துநிற்க வேண்டிய அவசியமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்ந்து நீடிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசு குழு இந்த விவகாரத்தில் 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால் உத்தரவிட்டார்.

Label