OUR CLIENTS
இந்திய ரயில்வே தேசத்தினை கட்டமைக்கும் ஓர் அமைப்பு: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!
இந்திய ரயில்வே தேசத்தினை கட்டமைக்கும் ஓர் அமைப்பு: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்! Posted on 11-Jan-2018 இந்திய ரயில்வே தேசத்தினை கட்டமைக்கும் ஓர் அமைப்பு: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!

புதுடெல்லி, ஜன.11-
இந்திய ரயில்வே தேசத்தினை கட்டமைக்கும் ஓர் அமைப்பு என குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று கூறியுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு ரயில் சேவைகளில் பணியாற்றுகிற தற்காலிக அதிகாரிகள் கொண்ட குழுவின் முன் பேசும்பொழுது, நாட்டின் கலாசார வழி மற்றும் மரபுகள் ஆகியவற்றை மேம்படுத்த மற்றும் பரப்புவதற்கு ரயில்வே நெட்வொர்க் உதவுகிறது என கூறினார். இந்திய ரயில்வே தேசத்திற்கான சேவை அமைப்பு மற்றும் தேசத்தினை கட்டமைக்கும் ஓர் அமைப்பு என ராம்நாத் கூறியுள்ளார். 

கடந்த 2015 முதல் 2016ம் ஆண்டு வரையில் 800 கோடி பயணிகளுக்கு இந்திய ரயில்வே சேவை செய்துள்ளது. தொழிற்சாலை மற்றும் வேளாண் பொருட்கள், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோரை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் பணியினை ரயில்வே செய்து வருகிறது என்றும் ராம்நாத் கூறியுள்ளார்.
கும்பமேளா திருவிழா விற்கான சிறப்பு ரயில்களானாலும் அல்லது மதிப்புமிக்க பேலஸ் ஆன் வீல்ஸ் ஆடம்பர ரயிலானாலும் உலகம் முழுவதுமுள்ள மக்களின் எண்ணத்தினை அது கவருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிக நகரங்களை இணைக்கும் வகையில் விரைவான, பாதுகாப்பு நிறைந்த மற்றும் போதிய அளவிலான மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு நாளும் நாட்டிற்கும் மற்றும் லட்சக்கணக்கான குடிமக்களுக்கும் சேவை செய்யும் ஒரு தனித்துவ வாய்ப்பினை வழங்கியுள்ள ரயில்வே அமைப்பில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என தற்காலிக அதிகாரிகளுக்கு நினைவுப்படுத்தி பேசியுள்ளார்.

Label