OUR CLIENTS
எம்.எல்.ஏ.,க்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் துணை முதல்வர் மசோதா தாக்கல்!
எம்.எல்.ஏ.,க்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் துணை முதல்வர் மசோதா தாக்கல்! Posted on 11-Jan-2018 எம்.எல்.ஏ.,க்களுக்கு  இருமடங்கு ஊதிய உயர்வு:  சட்டசபையில் துணை முதல்வர் மசோதா தாக்கல்!

சென்னை, ஜன.11-
எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டசபையில் நேற்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  2017ஆம் ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரின்போது, தமிழக எம்.எல்.ஏ .க்களின் சம்பளத்தை ரூ. 55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் கே. பழனிச்சாமி அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார். இந்நிலையில், எம்.எல்.ஏ., க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டசபையில் நேற்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா நிறைவேறினால், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சம்பளம் ரூ. 55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்கும். அதாவது இருமடங்காக அதிகரிக்கும். அதேபோல் எம்.எல். ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2,50,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியமும் ரூ. 20,000 ஆக அதிகரிக்கும்.

சட்டசபையில் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப் பட்டதற்கு எம்.எல்.ஏ.,க்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்களின் சம்பள உயர்வுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், வெளிநடப்பு செய்தனர்.

Label