OUR CLIENTS
அடுத்த நாட்டின் எல்லையை அபகரிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை: பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த நாட்டின் எல்லையை அபகரிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை: பிரதமர் மோடி பேச்சு! Posted on 11-Jan-2018 அடுத்த நாட்டின் எல்லையை அபகரிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை: பிரதமர் மோடி பேச்சு!

புதுடெல்லி, ஜன.11-
‘‘அடுத்த நாட்டின் நிலத்தையும், வளத்தையும் அபகரிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை’’ என இந்திய வம்சாவழி எம்.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். வெளி நாடுகளில் எம்.பி.க்களாக இருக்கும் இந்திய வம்சாவழியினரின் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:உலக அரங்கில் இந்தியா எப்போதும் முக்கிய பங்காற்றியுள்ளது. எந்த நாட்டின் நிலத்தையும், வளத்தையும் அபகரிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இருந்ததில்லை. திறனை மேம்படுத்தி கொள்வதில் மட்டுமே இந்தியா கவனம்  செலுத்தி வந்துள்ளது. லாபம், நஷ்டம் அடிப்படையில் எந்த நாட்டுடனும் இந்தியா உறவு வைப்பதில்லை. 

உலகில் தீவிரவாதமும், பயங்கர வாதமும் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவின் ஒருங்கிணைப்பு என்ற தகவல்தான் உலகுக்கு பாடம். பயங்கரவாதத்தை முறியடிக்கும் தத்துவம் ஏதாவது ஒன்று இருக்குமானால்,  அது மகாத்மா காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம் மற்றும் இந்திய பண்புகளின் தத்துவம்தான். இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பண்புகளுக்கும் உலகை வழிநடத்தும் சக்தி உள்ளது. 21ம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டு. இதில் இந்தியா முக்கிய பங்காற்றும். 

உலகம் முழுவதும், இந்தியாவின் பலம் அதிகரிப்பதை எண்ணி இந்தியா வம்சாவழியினர் பெருமை அடையலாம்.  கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த முதலீட்டில் பாதிக்கு மேல், அன்னிய முதலீடுதான். கடந்தாண்டில்  அன்னிய முதலீடு 16 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இவை யெல்லாம் மத்திய அரசின் சீர்திருத்தம் மற்றும் கொள்கை மாற்றங்களால் நடந்தவை. இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியரின் நம்பிக்கை மிக உயர்ந்ததாக உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் இதன் முடிவை நீங்கள்  பார்ப்பீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Label