OUR CLIENTS
தை பொங்கலில் வீடுகளில் கறுப்பு கொடி பட்டாசு தொழிலாளர்கள் அதிரடி அறிவிப்பு!
தை பொங்கலில் வீடுகளில் கறுப்பு கொடி பட்டாசு தொழிலாளர்கள் அதிரடி அறிவிப்பு! Posted on 11-Jan-2018 தை பொங்கலில் வீடுகளில் கறுப்பு கொடி பட்டாசு தொழிலாளர்கள் அதிரடி அறிவிப்பு!

சிவகாசி, ஜன.11-
 ‘வேலை இழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கு அரசும், ஆலை உரிமையாளர்களும் நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தைப்பொங்கல் அன்று வீடுகளில் கறுப்பு கொடி கட்டி போராட்டம் நடத்துவோம்‘ என சிவகாசி பட்டாசு போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வெளி மாநில வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி  முடங்கியது.  ‘பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க சுற்றுச்சூழல் விதியில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்‘ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டிச., 26 முதல் பட்டாசு ஆலைகளை மூடி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்றுடன் 15 வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. 

இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் அன்றாட செலவுக்கு கூட பணமின்றி தவிக்கின்றனர். இந்நிலையில் பட்டாசு தொழிலை அரசும், நீதிமன்றமும் நசுக்குவதாக மீனம்பட்டி, அனுப்பங்குளம், பாரைப்பட்டி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் பட்டாசு தொழிலாளர்கள் நேற்று, சிவகாசி பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர் .’பட்டாசு தொழிலாளர்கள் குடும்பங்கள் பட்டினியில் வாடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன. தொழி லாளர்களுக்கு சம்பள முன்பணம் தர வேண்டும் அல்லது அரசு பேரிடர் காலத்தில் வழங்கும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என வலியுறுத்தினர்.

போராட்டக் குழு : ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி கூறியதாவது: ‘பட்டாசு தொழில் நலிந்து அழியும் நிலையில் உள்ளது. பேரிடர் காலத்தில் என்ன நடக்குமோ அதுபோல் தொழிலாளர்கள் தனித்து விட்ட அகதி போல் மாறி விட்டனர். அடுத்த ஒரு வாரத்திற்கு போராட்டம் நீடித்தால் உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்படும். எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை. வேலை இல்லாத காலத்தில் உரிய நிவாரணத்தை அரசும், உரிமையாளர்களும் வழங்க வேண்டும். தைப்பொங்கலுக்குள் ஆலைகளை திறக்காவிடில் ‘கறுப்பு தினம்‘ அனுசரிக்கப்பட்டு, அன்று வீடுகளில் கறுப்பு கொடி கட்டி போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு கூறினார்.

Label