OUR CLIENTS
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் ஊழியர், அதிகாரிகள் ரூ.234 கோடி சுருட்டல்
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் ஊழியர், அதிகாரிகள் ரூ.234 கோடி சுருட்டல் Posted on 11-Jan-2018 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் ஊழியர், அதிகாரிகள் ரூ.234 கோடி சுருட்டல்

சென்னை, ஜன.11-
‘டாஸ்மாக்‘ ஊழியர்கள், ஒரு பாட்டிலுக்கு, ‘குடி’மகன்களிடம் இருந்து, கூடுதலாக, 10 ரூபாய் வசூலிப்பதன் வாயிலாக, ஒரு மாதத்திற்கு, 234 கோடி ரூபாய் சுருட்டுகின்றனர்.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 4,500 மதுக் கடைகள் உள்ளன. இவற்றில், பீர் மற்றும் மது வகைகளை, அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்க வேண்டும். ஆனால், கடை ஊழியர்கள், ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். டாஸ்மாக் கடைகளில், தினமும் சராசரியாக, 50 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகின்றன. ஒரு பீர் பெட்டியில், 12 பாட்டில்கள் உள்ளன. ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதல் விலை என்றால், ஆறு லட்சம் பாட்டிலுக்கு, தினமும், 60 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், தினமும் சராசரியாக, 1.50 லட்சம் பெட்டி, மது வகைகள் விற்பனையாகின்றன.ஒரு பெட்டியில், 48 பாட்டில்கள் உள்ளன. அதன்படி மொத்தம், 72 லட்சம் பாட்டிலுக்கு, தலா, 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதால், 7.20 கோடி ரூபாய் வசூலாகிறது.

இவற்றை மாதத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், டாஸ்மாக் ஊழியர்கள், ஒரு ரூபாய் கூட முதலீடு போடாமல், பீர் வாயிலாக, 18 கோடி ரூபாய்; மது வகைகள் வாயிலாக, 216 கோடி ரூபாயை, ‘குடி’மகன்களிடம் இருந்து வசூலிக்கின்றனர்.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடை ஊழியர்கள், ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கும், 10 ரூபாயில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர்களுக்கு, தலா ஒரு ரூபாய் வழங்குகின்றனர். இதனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

பொங்கலை முன்னிட்டு, தற்போது, மதுக் கடைகளில் அதிக கூட்டம் இருக்கும். கூடுதல் விலை வைத்து விற்கும் ஊழியர்களை பிடிக்க, தனி குழு நியமிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விலை கேட்கும் ஊழியர்களுடன், ‘குடி’மகன்கள் கூட்டாக சேர்ந்து, பிரச்னை செய்ய வேண்டும். அப்போது தான், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, போலீசார் வருவர். அந்த விபரத்தை, போலீசார், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தெரிவிப்பர். இதன் வாயிலாக, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

‘பிரீமியம் கமிஷன்!’
டாஸ்மாக் நிறுவனத்திற்கு, சென்னை, திருச்சி என, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடங்குகள் உள்ளன. சாதாரணம், நடுத்தரம், உயர் ரகம் என, மூன்று வகைகளில் மது பானங்கள் விற்கப்படுகின்றன. ஒரு கிடங்கில் இருந்து, தினமும் சாரசரியாக, 75 ஆயிரம் பெட்டி, மது வகைகள் அனுப்பப்படுகின்றன. அதில், ‘பிரீமியம்‘ என்ற, உயர் ரக மது, 5,000 பெட்டிகள் கூடவிற்பதில்லை. ஆனால், கிடங்குகளில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், மது தயாரிப்பு நிறுவனங்களிடம், ஒரு பாட்டிலுக்கு, 20 ரூபாய் வரை வசூலித்து, கடைகளுக்கு, 20 ஆயிரம் பெட்டிக்கு மேல், பிரீமியம் மது வகைகளை அனுப்புவதாக கூறப்படுகிறது. இதனால், கிடங்கு ஊழியர்கள் மாதம், பல லட்சம் ரூபாய் வசூலிப்பதுடன், கடைகளிலும் விற் பனையாகாத மது வகைகள், அதிகளவில் இருப்பு வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கூடுதல் விலைக்கு சரக்கு விற்றால், ‘சஸ்பெண்ட்!’
கூடுதல் விலைக்கு, மது வகைகள் விற்பதை தடுக்க, அதிரடியாக அபராதம் விதித்து, ‘டாஸ்மாக்‘ உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, டாஸ்மாக் நிறுவனம், தன் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:மதுக் கடைகளில், சில்லரை விற்பனை விலையை விட, ஒரு பாட்டிலுக்கு, ஒரு ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் ஊழியருக்கு, 1,000 ரூபாய் 
அபராதம் விதிக்கப்பட உள்ளது. ஒரு பாட்டிலுக்கு, ஐந்து ரூபாய் கூடுதலாக விற்றால், 5,000 ரூபாய் அபராதமும், பணி செய்யும் தாலுகாவில், எந்த கடையில் தினசரி மது விற்பனை குறைவாக நடக்கிறதோ, அந்த கடைக்கு இடமாற்றமும் செய்யப்படுவர். பாட்டிலுக்கு, 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் விற்றால், உடனே, ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவர்.மாவட்ட மேலாளர்கள், கடைகளில் தீவிரமாக சோதனை நடத்தி, அதிக விலைக்கு மது விற்கும் ஊழியர்கள் மீது, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label