OUR CLIENTS
சுருட்டிய பணத்தில் அழகிகளுடன் உல்லாசம் மோசடி மன்னன் போலீசில் அதிரடி தகவல்!
சுருட்டிய பணத்தில் அழகிகளுடன் உல்லாசம் மோசடி மன்னன் போலீசில் அதிரடி தகவல்! Posted on 11-Jan-2018 சுருட்டிய பணத்தில் அழகிகளுடன் உல்லாசம் மோசடி மன்னன் போலீசில் அதிரடி தகவல்!

காஞ்சிபுரம், ஜன.11-
நிலம் வாங்கி தருவதாக, 40 கோடி ரூபாய்க்கு மேல், மோசடி செய்த வழக்கில் கைதான, ஆசாமி, ‘தலைமறை வாக இருந்த மூன்று ஆண்டுகளில், சிங்கப்பூர், ரஷ்யா என, பல நாட்டு அழகி களுடன் உல்லாசம் அனுபவித்து, ஜாலியாக வாழ்ந்து வந்தேன்,’ என, போலீசாரிடம் தெரிவித்து உள்ளான். சென்னை, கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர், வெங்கடரமணன் (57).  இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னை சி.ஐ.டி.,நகரைச் சேர்ந்த, பிரதீப் குமார் உள்ளிட் டோருக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், கருநிலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், நிலம் வாங்கி தருவதாக, 40 கோடி ரூபாய்க்கு மேல், மோசடி செய்து தலைமறைவானார். 

மஹாராஷ்டிராவில் பதுங்கி இருந்த,  வெங்கடரமணனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், டிச., 31ல் கைது செய்து,  புழல் சிறையில் அடைத்தனர். இவரிடம், இரு நாட்கள், போலீஸ் காவலில் விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றம், அனுமதி அளித்துள்ளது, போலீசாரிடம், வெங்கடரமணன் கூறியிருப்பதாவது: சென்னையில், ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறந்த, முக்கிய புள்ளிகளில் நானும் ஒருவன். தொழிலை, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் என, விரிவு செய்து, பெரிய தொழில் அதிபர் போல், வலம் வந்தேன். ரஷ்யா, சிங்கப்பூர் என, பல நாடுகளுக்கு விமானத்தில் பறந்த வண்ணம் இருந்தேன். இதனால், நண்பர்கள் மத்தியில், கோடீஸ்வரர் என, முத்திரை குத்தப்பட்டேன்.அதை தக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக, 40 கோடி ரூபாய்க்கு மேல், மோசடி செய்து, மஹாராஷ்டிராவில் பதுங் கினேன். போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, சொந்தமாக, ஹெலிகாப்டர் வாங்கி, மும்பை, கோவா என, பல இடங்களுக்கு பறந்து பதுங்கினேன். சாட்டிலைட் போனும் பயன்படுத்தினேன். மஹாராஷ்டிராவில், ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனம் துவங்கி, ரஷ்யா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த, இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தினேன்.அந்நாடுகளுக்கு சென்று, அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்து, ஜாலியாக வாழ்ந்து வந்தேன். போலீசார் எப்படியோ என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Label