OUR CLIENTS
பதிவாளர்களுக்கு ஐ.ஜி., கடும் எச்சரிக்கை!
பதிவாளர்களுக்கு ஐ.ஜி., கடும் எச்சரிக்கை! Posted on 11-Jan-2018 பதிவாளர்களுக்கு ஐ.ஜி., கடும் எச்சரிக்கை!

 சென்னை, ஜன.11-
‘’மோசடி பத்திர பதிவு புகார்கள் தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை தராத, மாவட்ட பதிவாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆள்மாறாட்ட மோசடி மற்றும் நில அபகரிப்புகளை தடுக்கும் வகையில், 2011ல் பிறக்கப்பட்ட சுற்றறிக்கையை, நீதிமன்ற உத்தரவால், பதிவுத்துறை, 2017 அக்., 20ல் திரும்ப பெற்றது. 

அறிக்கை : இந்த சுற்றறிக்கை செயல்பாட்டில் இருந்த காலத்தில் நடைபெற்ற, மோசடி பத்திரப்பதிவு புகார்கள், அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க, பதிவுத்துறை தலைவர், 2017 நவ., 8ல் உத்தரவிட்டார். 

நடவடிக்கை : இந்த உத்தரவை, மாவட்ட பதிவாளர்கள் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட பதிவாளர்களை எச்சரிக்கும் வகையில், பதிவுத்துறை தலைவர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பதிவுத்துறையில், 2011 நவ., 3 முதல், 2017 நவ., 8 வரையிலான காலத்திலான புகார் பதிவேடுகள், அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, ஜன., 18க்குள், மாவட்ட பதிவாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையை தாக்கல் செய்யாதோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label