OUR CLIENTS
2018ல் இந்திய வளர்ச்சி இலக்கு 7.3 சதவிகிதமாக உயரும்: உலக வங்கி ஆய்வறிக்கை
2018ல் இந்திய வளர்ச்சி இலக்கு 7.3 சதவிகிதமாக உயரும்: உலக வங்கி ஆய்வறிக்கை Posted on 11-Jan-2018 2018ல் இந்திய வளர்ச்சி இலக்கு 7.3 சதவிகிதமாக உயரும்: உலக வங்கி ஆய்வறிக்கை

புதுடெல்லி, ஜன. 11-
2018ம் ஆண்டு இந்தியா 7.3% வளர்ச்சி இலக்கை அடையும் என உலக வங்கி ஆய்வறிக்கை கூறியுள்ளது. குளோபல் பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி அளித்துள்ள ஆய்வறிக்கையில், ''இந்தியாவில் நோட்டு ஒழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2017ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவிகிதமாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி 2018ம் ஆண்டில் இது 7.3 சதவிகிதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 7.5 சதவிகிதமாக உயருவதற்கு சாத்தியம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை  சந்தித்த உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ், ''இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்டும். குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் தனது திறனைக் காட்டிலும் சிறந்ததை எதிர்பார்க்கலாம்'' என்று தெரிவித்தார்.

Label