OUR CLIENTS
திருப்பூரை நாற்றமெடுக்க வைக்கும் திருநங்கைகள் கண்டும் காணாமல் மௌனம் சாதிக்கும் காவல் துறை!
திருப்பூரை நாற்றமெடுக்க வைக்கும் திருநங்கைகள் கண்டும் காணாமல் மௌனம் சாதிக்கும் காவல் துறை! Posted on 12-Jan-2018 திருப்பூரை நாற்றமெடுக்க வைக்கும் திருநங்கைகள் கண்டும் காணாமல் மௌனம் சாதிக்கும் காவல் துறை!

திருப்பூர், ஜன.12-
அண்மைகாலமாக திருப்பூரை கலங்கடித்து வரும் மாபெரும் பிரச்னை என்றால் அது திருநங்கைகள் சிலரது வழிப்பறி மற்றும் தவறான தொழில்தான். விபச்சார தடுப்பு பிரிவு, போதை தடுப்பு பிரிவு என்று காவல் துறை விழிப்புடன் செயல்பட்டாலும் கூட இவர்களை கைது செய்தால் எந்த சிறையில் வைப்பது என்ற குழப்பத்திலேயே நடவடிக்கை எடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கிறது திருப்பூர் காவல் துறை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் ரயில் பாதையை ஒட்டியுள்ள மக்கள் நடமாட்டம் இல்லாத சிட்கோ பகுதியில் புதர்களுக்கு நடுவே மறைந்து இருந்து அவ்வழியாக செல்லும் ஆண்களை வலுக்கட்டாயமாக உறவுக்கு அழைப்பது, அப்படி வராதவர்களை மிரட்டி, தாக்குதல் நடத்தி பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து கொள்வது என்று அராஜகப் போக்கில் நடந்து கொண்டிருந்தனர். இதனை தட்டிக் கேட்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தது. அவர்களிடம் மாமூல் மட்டும் வசூல் செய்து வந்தது.

இதுதொடர்பாக பல புகார்கள் வரவே காவல் துறை களத்தில் இறங்கி புதர்களை அப்புறப்படுத்தி விட்டு இரவு ரோந்து சென்று திருநங்கைகளின் அட்டகாசத்தை அடியோடு குறைத்தனர். ஆனால் இப்போது நிலவரம் முன்பைவிட அதிகமாகிவிட்டது. முன்பு ஒதுக்குப்புறமாக அரங்கேறிய அவலம் இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. சூரியன் மறைந்து விட்டால் போதும் மல்லிகைப்பூ கோலத்தில் மணப்பெண்கள் போல சீவி முடித்து சிங்காரித்து கொண்டு மணப்பெண்கள் போலவே அலங்காரத்துடன் இருசக்கர வாகனத்தில் வலம் வர ஆரம்பித்து விடுகின்றனர் திருநங்கைகள். திருப்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ஸ்டேட் பாங்க் அலுவலகம் எதிரே மேம்பாலத்தின் கீழ் பகுதி இருட்டில் சங்கமமாகின்றனர். தங்களது மல்லிகை பூ வாசத்தில் மயங்கிய வாலிபர்கள் முதல் வயோதிகர்கள் வரை வேட்டையாடி அனைத்தையும் பறித்து கொண்டு அனுப்பி வீடுகின்றனர் பஞ்சமாபாதகர்கள்.

ஒரு சிலருக்கு சிறப்பாக உபசரிப்பும் ஜோராக நடைபெறுகிறது. இரவு நேரத்தில் மேம்பாலத்தின்மேல் வாகனத்தில் சென்றால் கைகாட்டி வாகனத்தை நிறுத்தி ஆயில் மசாஜ் செய்யலாமா என்று 500க்கு பேசி ரூ.100, ரூ.200க்கு முடித்து இறங்கி விடுகின்றனர். அதேபோல் பழைய பேருந்து நிலையம் பின்புறமும் இவர்களது ஆதிக்கம்தான் நடக்கிறது. எஸ்பி மாறிவிட்டால் போதும் நிலைமை தலைகீழாகி விட்டது. வெளியூர் செல்பவர்கள் யாராவது சிறுநீர் கழிக்க ஒதுக்குப்புறமாக சென்றால் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று அவரிடம் உள்ளதெல்லாம் பறித்துவிட்டு விரட்டி அடிக்கின்றனர். அவர்கள் பிச்சை எடுத்து ஊருக்குச் சென்ற கதையெல்லாம் அதிகமாக நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களால் மக்கள் பீதியமடைந்துள்ளனர். தவறு செய்வதற்காக சென்றவன் என்றால் பரவாயில்லை. அந்த வழியாகச் செல்பவர்களை எல்லாம் வழிமறித்து பணத்தை பறித்து கொள்கின்றனர். இரவில் முகம் சரிவர தெரியாத காரணத்தால் காவல் நிலையத்தில் அவர்களை அடையாளம் காட்டுவது சிரமமாக உள்ளது.

இவர்கள் முன்பு பாண்டியன் நகர் பகுதியில்தான் இருந்தனர். ஆனால் தற்போது கமிஷனர் அலுவலகம் செல்லும் மெயின் ரோட்டிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் வீட்டின் முன்பு டாஸ்மாக் கடையும் வாட்டமாக அமைந்துள்ளது. விஐபி நண்பர்கள் மட்டும் வீட்டில் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் 100க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் செல்லும் வழியிலேயே இப்படி ஒரு விரும்பத்தகாத கூத்து, கும்மாளம் நடப்பது ஆரோக்கியமானது அல்ல. இதில் ஒரு சில நல்ல திருநங்கைகளும் உள்ளனர். கை தட்டி ரூ.5, ரூ.10 என்று கேட்டு வாங்கிச் செல்பவர்களும் உண்டு. ஆனால் ஒரு சில திருநங்கைகள் சிறிய வயது பெண்கள், வாலிபர்கள் கடையில் அமர்ந்திருந்தால் இவர்களே கல்லாப்பெட்டியில் கை வைத்து பணத்தை எடுத்துச்சென்ற வண்ணம் உள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும். பணம் தர மறுத்தால் அவர்களை தரக்குறைவாக பேசுவதோடு அவர்களின் ஆடைகளை கடைமுன்பே அவிழ்த்து விடுவது என்று அத்துமீறிய செயல்களில் இறங்குகின்றனர். 

திருப்பூரில் பணிபுரியும் வடமாநில வாலிபர்களுக்கு இதுதான் விபச்சார விடுதி. இவர்களின் பலகீனத்தை பயன்படுத்தி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர் திருநங்கைகள். வெளியூர், வெளிமாநில இளைஞர்கள் ஊதியம் வாங்கிக் கொண்டு தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு ரயில் நிலையம் வரும்போது அவர்களை கண்டறிந்து தந்திரமாக பேசி பணத்தை பறித்த கொண்டு அல்வா கொடுத்துவிட்ட அவலமும் நடந்துள்ளது. காவல் துறையினரோ இவர்களை கைது செய்து ஆண்கள் சிறையில் அடைப்பதா? பெண்கள் சிறையில் அடைப்பதா? என்று கேள்வி கேட்கின்றனர். அப்போது இவர்கள் தவறு செய்து கொண்டே இருப்பார்கள், போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டே இருப்பார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது. இரவு நேரம் ரோந்து செல்பவர்கள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் போதும் எல்லாம் குறைந்து விடும். தமிழகத்தில் எத்தனையோ திருநங்கைகள் நல்ல வேலை செய்கின்றனர். சிலர் காவல் துறை உதவி ஆய்வாளராக உள்ளனர். ஆட்டோ ஓட்டுநராக, போலீசாக அரசு அதிகாரிகளாக இன்னும் பல துறைகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு நன்மதிப்பை பெற்று வருகின்றனர். ஒரு சில மோசமான திருநங்கையர்களால்தான் பல நல்ல திருநங்கைகளுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது என்கின்றனர் அக்கறையுடன்.

Label