OUR CLIENTS
ஹோட்டல்களில் கூட்டம் கூடாது; கார் வாங்கக் கூடாது புதுச்சேரி அரசுத் துறைகளுக்கு புதிய கட்டுப்பாடு!
ஹோட்டல்களில் கூட்டம் கூடாது; கார் வாங்கக் கூடாது புதுச்சேரி அரசுத் துறைகளுக்கு புதிய கட்டுப்பாடு! Posted on 12-Jan-2018 ஹோட்டல்களில் கூட்டம் கூடாது; கார் வாங்கக் கூடாது  புதுச்சேரி அரசுத் துறைகளுக்கு புதிய கட்டுப்பாடு!

புதுச்சேரி, ஜன.12-
நிதி நெருக்கடியால் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த அரசு துறைகளுக்கு நிதித்துறை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால் புதிய வாகனங்கள் வாங்கக்கூடாது. விமானப்பயணத்தை குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்வது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

புதுச்சேரி அரசு கடும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி உள்ள சூழலால் அரசுத் துறைகளுக்கு புதுச்சேரி நிதித்துறை 7 பக்கங்கள் கொண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள்:
அரசுத் துறைகள் நேரடி பணி நியமனத்தின்படி ஆட்களை நேரடியாக நியமிக்கக்கூடாது. காலிப் பணியிடங்கள் நிரப்புவது, பணியிடமாற்றம், பதவி உயர்வு, வேறு துறைகளில் இருந்து முறையான ஒப்புதலுடன் மாற்றம் ஆகியவற்றின் படியே நிரப்ப வேண்டும். அதேபோல் கூடுதல் ஆட்கள் உள்ள இடங்களை காலியிடங்களில் நிரப்ப வேண்டும். அதிக பணியாளர்கள் இருந்தால் குறிப்பிட்ட திட்டங்களில் பணியமர்த்தலாம்.

வழக்கமான அதிகாரபூர்வ பணிக்காக ஊழியர்களுக்கான வவுச்சர் கட்டணத்தை தடுக்க துறை முயற்சித்துள்ளது. ஹோட்டல்களில் கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தக்கூடாது. விமானப்பயணத்தை அதிகாரிகள் எக்னாமிக் பிரிவில்தான் பயணிக்க வேண்டும். விமான வலைதளத்தில் இருந்து குறைந்த விலையில் விமான பயண டிக்கெட்டைப் பதிவு செய்ய வேண்டும்.  அலுவலக செலவுகளை பத்து சதவீதம் குறைக்க வேண்டும். அதில் தொலைபேசிக் கட்டணம், எரிபொருள் செலவு, டீ, காபி செலவு ஆகியவை அடங்கும். அதேபோல் புதிய வாகனங்கள் வாங்கக்கூடாது. அதை ஒத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற பயன்பாட்டு வாகனங்கள் வாங்குவதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வாகனங்களை அவுட்சோர்சிங் செய்யக்கூடாது. மைலேஜ் குறைக்க வேண்டும். அலுவலகக் கட்டடத்தின் அருகேயே வாகனங்களை நிறுத்த வேண்டும். வாகனங்கள் ‘எந்த சூழ்நிலையிலும்‘ ஓட்டுநர்களின் வசிப்பிடத்திற்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. மின்சாரம் பயன்படுத்துவதில் செலவினம் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் மூலம் குறைந்தபட்சம் 5 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும். இவ்வாறு புதுச்சேரி நிதித்துறை அரசுத் துறைகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

Label