OUR CLIENTS
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முதலீடுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ராம்நாத் கோவிந்த் அழைப்பு
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முதலீடுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ராம்நாத் கோவிந்த் அழைப்பு Posted on 12-Jan-2018 வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முதலீடுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ராம்நாத் கோவிந்த் அழைப்பு

புதுடெல்லி, ஜன. 12
இந்தியாவின் வளர் ச்சியுடன் உங்கள் நாட்டு முன்னுரிமை திட்டங்களை இணையுங்கள் என்று இந்திய வம்சாவளி எம்.பி.க்களிடம் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வலியுறுத்தினார். இந்திய வம்சாவளி எம்.பி.க் கள் மாநாடு நேற்று முன்தினம் டெல்லியில் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்கவுரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: வெளிநாட்டு வாழ் இந்தியர் களுக்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்பு இந்தியாவில் பிரகாசமாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு உங்கள் நாட்டு முன்னுரிமை திட்டங்களை இணைப்பது அவசியம். இந்த இரண்டையும் எவ்வாறு இணைக்க முடியும் என்பதை ஆராயுங்கள். இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பன்முகத் தன்மைக்காக இந்தியர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

இதுவே நமது மிகப்பெரிய பலமாகும். இத்தகைய தாராள மற்றும் சமூக சிந்தனைகளை இந்திய வம்சாவளியினர் கொண்டுள்ளனர். உலகில் விரைவாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிக அதிக அளவில் இருக்கும்.

இந்தியாவின் வளர்ச்சி 130 கோடி இந்திய மக்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவின் நட்புறவு நாடு களுக்கும் நீங்கள் வாழும் நாடு களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

Label