OUR CLIENTS
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்து மதத்தை வளர்க்கிறதா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்து மதத்தை வளர்க்கிறதா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் Posted on 12-Jan-2018 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்து மதத்தை வளர்க்கிறதா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி, ஜன. 12-
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்து மதத்தைவளர்க்கிறதா? என்று விளக்கம் தரும்படி மத்தியஅரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீசு அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் கேந்திரியா வித்யாலயா ஆகும். நாடு முழுவதும் 1100க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் இந்து மதத்தைவளர்ப்பதாக கூறி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தினமும் பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது. இதில்  இந்தி   மற்றும் சமஸ்கிருத த்தில் பிரார்த்தனை பாடல் பாடப்படுகிறது.  அனைவரும் கண்களை மூடிக்கொண்டு கைகளால் கும்பிட்டபடியே இந்த பொது பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்து மதத்தை வளர்ப்பதாக கூறி வக்கீல் வினாயக் ஷா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.  அரசியல் சட்டத்தின் 19வது பிரிவின்படி பேச்சுரிமை, கருத்துரிமை என்பது அனைவருக்கும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எந்த ஒரு மாணவரும் பிரார்த்தனை கூட்டத்தில் இந்த மதத்தின் பாடலைத்தான் பாட வேண்டும். கண்களை மூடிக் கொண்டு கும்பிட்டபடியே நிற்கவேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது. அரசு நிதியில் நடத்தப்படும் பள்ளிகளில் மத நம்பிக்கைகளை வளர்ப்பதை விட அரசியல் சட்டத்தின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது பற்றியும், அறிவுப்பூர்வமான தகவல் களையும் மாணவர்களிடம் விதைக்கவேண்டும் என்றும் அவர் கோரி இருக்கிறார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட  நீதிபதி ரோகின்டன் நரிமன் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசும் கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகமும் 2 வாரத்தில்  பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Label