OUR CLIENTS
பா.ஜ.வில் பயங்கரவாதிகள் சித்தராமையா பதிலடி
பா.ஜ.வில் பயங்கரவாதிகள் சித்தராமையா பதிலடி Posted on 12-Jan-2018 பா.ஜ.வில் பயங்கரவாதிகள் சித்தராமையா பதிலடி

பெங்களூரு, ஜன. 12
பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளத்தில் பயங்கரவாதிகள் உள்ளனர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார். கர்நாடகம் வந்துள்ள பா.ஜ.தலைவர்அமித்ஷா, கர்நாடக அரசு இந்துக்களின் எதிரி என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடியாக முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம் அமைப்புகளில் பயங்கரவாதிகள் உள்ளனர். அதனால் தான் அவர்கள் பயங்கரவாதிகள்போலவே செயல்படுகிறார்கள்.

பயங்கரவாத செயல்களில்  யார்ஈடுபட்டாலும் சரி.. அதை அரசு சகித்துக் கொள்ளாது. யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அது பாப்புலர் பிராண்ட் ஆக இருந்தாலும் சரி.. எஸ்டிபிஐ கட்சியாக இருந்தாலும் சரிபஜ்ரங்கதளம்... விஸ்வ இந்து பரிஷத் அல்லது எந்தஒரு அமைப்பாக இருந்தாலும் சரி.

சமூக ஒற்றுமையை, அமைதியை சீர்குலைத்து மத துவேஷத்தை வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றை தடை செய்யும்படி மத்தியஅரசுக்கு அறிக்கை அனுப்பப்படுமா. அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்க வேண்டும். அது பற்றி விசாரணை நடத்தப்படும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதற்கு பா.ஜ.தலைவர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளனர். சித்தராமையா மனநிலை தவறி விட்டார் என்று பா.ஜ. எம்.எல்.சி. சோமண்ணா கூறிஉள்ளார். இந்தநாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். அரும்பணியாற்றி உள்ளது. அவர்கள்மீது பழி சுமத்திய சித்தராமையா மன்னிப்பு கேட்கவேண்டும். கேரளா போன்ற சூழலை உருவாக்க பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. எனவே அவர்கள் மீது மென்மையான போக்கை முதல்வர் கடைப்பிடிக்கவேண்டாம் என்றும் அவர்கேட்டுக்கொண்டார்.

Label