OUR CLIENTS
அரசியல்வாதி பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் : சந்திரபாபு நாயுடு
அரசியல்வாதி பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் : சந்திரபாபு நாயுடு Posted on 12-Jan-2018 அரசியல்வாதி பிள்ளைகள்  அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் : சந்திரபாபு நாயுடு

ஆந்திரா, ஜன. 12-
தனியார் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் மரியாதை அரசு பள்ளிகளுக்கு அளிக்கப்படுவதில்லை. ஏழை மக்களின் குழந்தைகள் மட்டுமே அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதினால், நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளானை போல் ஆங்காங்கே தீடீர் என்று முளைத்த தனியார் பள்ளிகளும், கல்வி கட்டண கொள்ளையில் ஈடுப் பட்டுள்ளன. தற்போது இதனை மாற்றி அமைக்க,   எம்.எல்.ஏக்கள், எம்சிக்கள், அமைச்ச ர்கள் ஆகியோர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர ஆலோசித்து வருகிறது ஆந்திர அரசு.   

இது குறித்து பேசிய ஆந்திரா சுற்றுலா துறை அமைச்சர் பூமா அகிலா, அனைவர்க்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பது முதல்வரின் கனவு, அதனை தற்போது நிறைவு செய்யும் வகையில் அரசு நடத்தும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, தரம்  உயர்த்தப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துரையாடினார் என்று தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் பட்சத்தில், ஆந்திர அரசு தலைமையில் செயல்படும்  எம்.எல்.ஏக்கள், எம்சிக்கள், அமைச்சர்கள் ஆகியோர்களின் குழ ந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். இதனால் ஏழை குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும். 

கடந்த ஆண்டு மட்டும் ஆந்திர அரசின் கீழ் செயல்படும் 13 மாவட்டங்களில் உள்ள  9000 ஆரம்ப மற்றும் நடுநிலை அரசு பள்ளிகள்  போதுமான மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Label