OUR CLIENTS
தேர்தல் பணிகளில் இனி ஆசிரியர்களுக்கு விதி விலக்கு
தேர்தல் பணிகளில் இனி ஆசிரியர்களுக்கு விதி விலக்கு Posted on 12-Jan-2018 தேர்தல் பணிகளில்  இனி ஆசிரியர்களுக்கு விதி விலக்கு

புதுடெல்லி, ஜன. 12-
தேர்தல்பணி, சத்துணவு, கணக்கெடுப்பு போன்ற பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தலுடன் வேறு அரசுப் பணிகளும் தரப்படுகிறது. இதற்கு  தனியாக ஊதியம்வழங்கப்பட்டபோதிலும்,  இதரப் பணிகளால் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படுகிறது. பல நேரங்களில் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் கூட பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை.

மேலும் அரசுப்பணிமாணவர்களின் கல்வித்தரம் குறைவுக்கு ஆசிரியர்களின் இதரப்பணிகளும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில்,  இனி ஆசிரியர்களுக்கு தேர்தல்பணிகள், கணக்கெடுப்பு பணி மற்றும் சத்துணவு பணி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 

தேசிய பல்கலைக்கழக கல்வி திட்டம் மற்றும்நிர்வாகத்துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதன்பேரிலேயே, ஆசிரியர்களுக்கு இதரப் பணி வழங்கக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுத்திருப்பதாக தெரிகிறது.

Label